ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள கந்தசாமி ஊர் வடக்கு தயிர் பாளையத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி மற்றும் தீபா தம்பதியினர். விவசாயிகளான இவர்கள் அந்த பகுதியில் விசைத்தறி பட்டரையும் வைத்து நடத்தி வந்த நிலையில் இவர்களுக்கு பிரதீப் (22) என்ற மகனும் இருந்துள்ளார். இவர் கோவையில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு கல்லூரியில் பொறியியல் படித்து வந்தார். இப்படியான நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறையில் ஊருக்கு வந்த அவர் தந்தையின் விசைத்தறி பட்டறைக்கு சென்றுள்ளார். அங்கு மழையால் கூரை ஒழுகுவதை சரி செய்ய சிமெண்ட் ஓட்டின் மீது ஏறி உள்ளார். அப்போது ஓடு உடைந்து மேலே இருந்து கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிரதீப் பரிதாபமாக உயிரிழந்தார். மகன் இறந்தது முதல் வேலுச்சாமியும் தீபாவும் அவர் நினைவாகவே தாங்க முடியாத மன வேதனையில் இருந்த நிலையில் இனி உயிரோடு இருந்து என்ன செய்யப் போகிறோம், நாங்களும் செத்துப் போகிறோம் என்று உறவினர்களிடம் கூறிவந்துள்ளனர். இப்படியான நிலையில் தீபா நேற்று தனது உறவினர்களுக்கு whatsappபில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தார். அதில் பிரதீப் குட்டியின் பிரிவை எங்களால் மறக்க முடியாது, நாங்களும் எங்கள் தங்கத்தை தேடி போகிறோம், எங்களின் இந்த முடிவுக்கு நாங்கள் மட்டுமே காரணம் என கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சடைந்த உறவினர்கள் உடனே வீட்டுக்கு சென்று பார்த்தபோது வேலுச்சாமியும் தீபாவும் விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவருடைய உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த விசாரணை நடத்தி வருகிறார்கள். மகன் உயிரிழந்த துக்கத்தில் பெற்றோரும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் புதைக்கப்பட்ட மீன் வியாபாரியின் உடலைத் தோண்டி எடுத்து, அவரது கழுத்தில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க…
கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்பு வகித்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாடு விவசாயிகள் மத்தியில்…
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…