தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் மீண்டும் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று திமுக தலைமை ஒரு பக்கம் சிந்தித்து கொண்டு இருக்க மறுப்பக்கம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கான வேலைகளை செய்து வருகின்றார். இவர்களுக்கு இடையே தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் புதிய ஆட்சியை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். என்னதான் மற்ற கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டிருந்தாலும் திமுகவின் கூட்டணி என்பது பலமாக உள்ளது. அதனால் மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நம்பிக்கையில் முதல்வர் ஸ்டாலின் உள்ளார்.
இப்படியான நிலையில் அதிமுகவின் கோட்டையாக இருக்கும் கொங்கு மண்டலத்தில் திமுக அதிமுக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்று செந்தில் பாலாஜிக்கு ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார். இதனால் திமுகவின் வாக்கு வங்கியை பெருக்கும் வகையில் இளைய மாற்றுக் கட்சியினரை திமுகவில் இணைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இப்படியான நிலையில் அதிமுக மற்றும் அமமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகிய திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். அமமுக நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர், மாவட்டத் துணைச் செயலாளர், மாவட்ட சிறுபான்மை அணி செயலாளர் உள்ளிட்ட பல மாவட்ட நிர்வாகிகளும் அதிமுகவில் இருந்து முக்கிய தலைவர்களும் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். 2026 தேர்தலை முன்னிட்டு அவர்களுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…