#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் MGR. அரசியலும் சரி சினிமாவிலும் சரி தனக்கென தனி ராஜ்யத்தை உருவாக்கி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவர் MGR.
குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த MGR பின்னர் நடிகராக உயர்ந்தார். இவரது படங்களில் சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர்.
தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய MGR அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தியவர் MGR.
MGR மிகவும் நல்ல குணம் படைத்தவர். உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர். வாரி வழங்கும் வள்ளல். அதேபோல தான் நடிக்கும் படங்களில் வசனங்கள் ஆகட்டும் பாடல்கள் ஆகட்டும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமே தவிர எந்த ஒரு தவறான சிந்தனை வர வைக்க கூடாது என்பதில் கவனமாக இருப்பவர்.
அப்படி அவர் நடித்த நினைத்ததை முடித்தவன் என்ற படத்தில் கண்ணை நம்பாதே என்ற பாடல் வரும். அதில் பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு தன்வழி போகிறவர் போகட்டுமே என்ற பாடல் வரியை எழுதி இருப்பார் பாடலாசிரியர். இதை கவனித்த எம்ஜிஆர் அந்த பாடலாசிரியரை அழைத்து ஏன் பொன் பொருள் வந்த பிறகு நல்வழியில் போறவர்களும் இருக்க தானே செய்கிறார்கள். அதனால் இந்த வரியை மாற்றி எழுதுங்கள் என்று கூறியிருக்கிறார்.
உடனே பாடலாசிரியர் பொன் பொருள் வந்தவுடன் வந்த வழி மறந்து விட்டு கண் மூடி போகிறவர் போகட்டுமே என்று எழுதி இருக்கிறார். அப்படி தனது படத்தில் வரும் சிறு வரி கூட மக்களுக்கு தீங்கானவற்றை எடுத்துரைக்கக் கூடாது என்பதில் எம்ஜிஆர் கவனமாக இருப்பார் என்பது இதிலிருந்து தெரிகிறது. அதனால் தான் மக்கள் கொண்டாடும் தலைவராக இருந்திருக்கிறார் எம்ஜிஆர்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…