#image_title
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர் நகைச்சுவை நடிகராக நடித்து பிரபலமானவர் விவேக். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிறந்த விவேக் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தவர். சிறுவயதிலேயே முறைப்படி பரதநாட்டியம் பயின்றவர். தனது சகோதரி உடன் பல மேடைகளில் பரதநாட்டியம் ஆடியிருக்கிறார். பரதநாட்டியம் மட்டுமல்லாது ஹார்மோனியம் வயலின் தபேலா போன்ற இசைக்கருவிகளின் இசைக்க வல்லவர் விவேக்.
அப்படி பரதநாட்டியத்தின் இறுதிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக கலாஷேத்ரா மூலமாக சென்னை சென்ற விவேக்கிற்கு பாலச்சந்தர் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர் தனது படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கொடுத்தார். புதுப்புது அர்த்தங்கள் மின்னலே பெண்ணின் மனதை தொட்டு போன்ற திரைப்படங்களில் நடிகர்களுக்கு நண்பனாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். விவேக்கின் நகைச்சுவை மூலமாக லஞ்சம் மக்கள் தொகை பெருக்கம் அரசியல் மூடநம்பிக்கை போன்றவற்றை எடுத்துரைப்பார்.
யாரும் எதிர்பாரா விதமாக நடிகர் விவேக் 2021 ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமானார். இவருடைய மனைவி அருட்செல்வி நீண்ட காலத்துக்கு பிறகு தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் விவேக் அவர்களை சந்தித்தது எப்படி அவர்களது திருமணம் நடந்தது எப்படி என்பதை பற்றி பகிர்ந்து இருக்கிறார்.
அருட்செல்வி கூறியது என்னவென்றால் விவேக் சார் நான் படிச்ச காலேஜ்ல சிஎப் Guest ஆ தான் வந்து இருந்தாரு. நான் ஸ்டுடென்ட் யூனியன் லீடரா இருந்தேன். என்னோட Proffesor கூட நான் கொஞ்சம் கிளோஸ் ஆக இருப்பேன். விவேக் சாரோட அம்மா வந்து என்னோட Proffesorக்கு நல்லா தெரிஞ்சவங்க. அப்போ அவங்க விவேக் சாருக்கு அலையன்ஸ் பாக்குறாங்க அப்படின்னு அவங்களோட ஜாதகம் டீடைல்ஸ் எல்லாம் ப்ரொபசர் கிட்ட கொடுத்தாங்க. எங்க Proffesorக்கு என்னை ரொம்ப பிடிக்கும் அப்படிங்கிறதுனால என்னோட அம்மாவுக்கு அதை கொடுத்தாங்க.
எங்க வீட்ல எல்லாருக்குமே விவேக் சாரை ரொம்ப புடிச்சி இருந்தது. அதுக்கு அப்புறம் ரெண்டு குடும்பமும் மீட் பண்ணி எல்லாம் பேசி அப்படித்தான் எங்க கல்யாணம் நடந்தது. எங்களோட கல்யாணம் நடந்ததுக்கு காரணமே எங்க Proffesor தான் என்று முதல் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார் விவேக்கின் மனைவி அருட்செல்வி .
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வேடிக்கையான வீடியோவில், ஒரு மாந்தோட்டத்தின் அருகே இரயில் ஒன்று தற்காலிகமாக நின்று கொண்டிருக்கிறது.…
ஒரு விவசாயி தனது நிலத்தில் கடுகுப் பயிர்களை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந்த முறை கடுகு விளைச்சல்…
ஒடிசா மாநிலம் கோர்தா (Khorda) மாவட்டத்திற்குட்பட்ட பாக்மாரி காவல் நிலையப் பகுதியில், மதுபோதையில் இருந்த இரு இளைஞர்கள் பொது இடத்தில்…
தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, தமிழகச் சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சாந்தி அவர்கள்…
மின்துறை தலைமை அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான முக்கிய தரவுகள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள்…
ஒரு நபர் தனது பைக்கிற்குப் பெட்ரோல் போடுவதற்காகப் பெட்ரோல் பங்கிற்குச் சென்றார். அங்கு வேலை செய்யும் ஊழியரிடம், "அண்ணே, எனக்குக்…