ஒரு நபர் தனது பைக்கிற்குப் பெட்ரோல் போடுவதற்காகப் பெட்ரோல் பங்கிற்குச் சென்றார். அங்கு வேலை செய்யும் ஊழியரிடம், “அண்ணே, எனக்குக் கொஞ்சம் அவசரம், சீக்கிரம் 840 ரூபாய்க்குப் பெட்ரோல் போடுங்க” என்று கூறிவிட்டு, தனது மொபைல் போனில் யாருடனோ பேசத் தொடங்கினார். இதைப் பார்த்த அந்தப் பங்க் ஊழியர், இவர் போனில் பிசியாகப் பேசிக் கொண்டிருப்பதால் எப்படி இருந்தாலும் பெட்ரோல் மீட்டரைப் பார்க்கப் போவதில்லை என்று தவறாக எண்ணினார். இதனால் 840 ரூபாய்க்குப் பதிலாக 640 ரூபாய்க்கு மட்டுமே பெட்ரோலை நிரப்பிவிட்டு, வண்டியை எடுத்த அந்த நபரிடம், “சார் பெட்ரோல் போட்டாச்சு” என்று கூறியுள்ளார்.
ஆனால், அந்த நபர் அலர்ட்டாக “நான் உங்களிடம் 840 ரூபாய்க்குத் தானே பெட்ரோல் போடச் சொன்னேன், ஏன் இவ்வளவு கம்மியாக இருக்கிறது?” என்று கேட்டுள்ளார். உடனே அந்த ஊழியர் தன் தவறை மறைப்பதற்காக, “நீங்க தான் போன் பேசிக்கிட்டு மீட்டரையே பார்க்கலையே சார், நான் கரெக்டா 840 ரூபாய்க்குத் தான் பெட்ரோல் போட்டேன்” என்று கூறி அந்த நபருடன் வீணாக வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினார். பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களின் கவனக்குறைவை முதலாக்கிக் கொண்டு நடக்கும் ஏமாற்று வேலைகளில் ஒன்றாக இச்சம்பவம் அமைந்துள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…