ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு கல்வி கற்பித்து, செலவுகளை ஏற்பதாகக் கூறி மும்பைக்கு அழைத்து வந்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கொடூர குற்றத்தில் ஈடுபட்ட இரண்டு தம்பதிகள் உட்பட எட்டு பேரை மீரா-பயந்தர், வசாய்-விரார் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முன்னதாக, கடந்த மார்ச் 3ஆம் தேதி சஞ்சய் குப்தா என்பவர், தனது பாதுகாப்பில் இருந்த சிறுமி ஹோலி பண்டிகை பொருட்கள் வாங்கச் சென்றபோது காணாமல் போனதாக பயந்தர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் ரகசிய தகவல்களின் அடிப்படையில் சிறுமியை மீட்டனர். பெண் காவல் அதிகாரி ஒருவர் அச்சிறுமியிடம் நடத்திய விசாரணையில், சஞ்சய் குப்தா தனது உறவினர் இல்லை என்பதும், படிக்க வைப்பதாக ஏமாற்றி மும்பைக்கு அழைத்து வந்து தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது. மேலும், அந்தச் சிறுமி 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டு, பல்வேறு நபர்களால் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும் அம்பலமானது.
சிறுமி காணாமல் போன வழக்கை விசாரித்த போது, அதன் பின்னணியில் ஆழமாக வேரூன்றியிருந்த ஒரு பெரிய பாலியல் கடத்தல் கும்பலை தற்செயலாகக் கண்டறிந்ததாக மூத்த காவல் ஆய்வாளர் முகுந்த் யாதவ் தெரிவித்துள்ளார். தற்போது, கைது செய்யப்பட்ட எட்டு பேருக்கு எதிராகவும் ஆட்கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த கும்பலுடன் தொடர்புடைய மற்ற நபர்களைப் பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையையும் காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…