Connect with us

TRENDING

அந்த பையன் அதுக்காக பண்ணல.. பாவம், தயவு செஞ்சி அப்டி பண்ணாதீங்க.. SOFA பையன் பற்றி வருத்தப்பட்டு பேசிய Captain Miller பட நடிகர்..

படிக்கும் வயதிலேயே தனது அப்பா தொழில்  வளர்ச்சிக்கு மிகுந்த ஆர்வம் காட்டும் சிறுவன் “சோபா நாயகன்” என்று வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது. இந்தச் சிறுவன் தன்னுடைய அப்பா சோபா பிசினஸ் வளர்ச்சியடைய YouTube சேனல் மூலம் வீடியோவை பதிவிட்டு வருகிறார். இந்த வீடியோக்களுக்கு பலரும் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் தெரிவித்த வண்ணம் உள்ளன. இதை கேப்டன் மில்லர் பட நடிகர்  பேட்டியில் அந்த சிறுவனை தவறாக பேசாதீர்கள் என்று கூறியிருந்தார் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

   

8 வகுப்பு படிக்கும்  சிறுவன் youtube channel ஆரம்பித்து அதில் அப்பா பிஸ்ஸின்ஸ் வளர்ச்சிக்கு உதவும் விதமாக வீடியோ போட்டு சோபா பார்னிச்சர் போன்ற பொருள்களை விற்பனை செய்து வருகிறார். இதில் மீஜாம் புயலின் பாதிப்பை வைத்து youtube channelல் சோபா பிசினஸ் சேல்ஸ் பற்றி வீடியோ போட்டிருந்தார் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.

அதில், மிட்ஜாம் புயலின் காரணமாக வீட்டில் சோபா போன்ற பொருட்கள் சேதமடைந்திருக்கும் நாங்கள் மிகக் குறைந்த விலையில் தரமான சோபாக்களை செய்து தருகிறோம், 20000 ரூபாய் சோபா புயல் காரணமாக 10 ஆயிரத்திற்கு தருகிறோம் என்றும் அந்த வீடியோவில் பதிவிட்டிருந்தார். மேலும் உங்களுக்கு தேவையானபொருட்களை தரமானதாகவும் மிக குறைந்த விலையிலும் செய்து தருகிறோம் என்றும் கூறினான்.

காலை 4 மணிக்கே எழுந்து சோபா தயாரிப்பு மற்றும் அவர்கள் வைத்திருக்கும் சோபாவை பற்றி வீடியோ மூலம் விற்பனை செய்து கொண்டிருக்கும் இந்தச் சிறுவன் அப்பா கஷ்டத்தை கண்டு தொழிலில் முன்னேற தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறான். இந்த விடியோவால் சோபா நாயகன்  பலரின் வாழ்த்துகளையும், விமர்சனத்தையும் பெற்றான், இருப்பினும் அந்த சிறுவன் வீடியோ போடுவதை மட்டும்  நிறுத்தவே இல்லை. இந்த சிறுவனுக்கு சோபா விற்பனை செய்வதுதான் முக்கியம் என்று பலரும் கூறியிருந்த நிலையில், கேப்டன் மில்லர் பட நடிகர் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ மக்களிடையே வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Roshan_Edits (@roshan_edits0206)

author avatar
Mahalakshmi
Continue Reading

More in TRENDING

To Top