Connect with us

CINEMA

மறுபடியும் முதல்ல இருந்தா..? ஏ.ஆர். ரகுமானின் தலையில் விழுந்த அடுத்த இடி.. இதுக்கு ஒரு முடிவே இல்லையா..!

பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டில் குளறுபடி ஏற்பட்டதால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். ஏ.ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏ.ஆர் ரகுமான் டிக்கெட் பணத்தை திரும்ப கொடுத்தார்.

   

அந்த சர்ச்சை ஓய்வதற்குள் இந்தியாவில் சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மீது மோசடி புகார் அளித்திருந்தனர். கடந்த 2018-ஆம் ஆண்டு தேசிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாட்டை நடத்துவதற்கு திட்டமிட்டோம். பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக 29.5 லட்சத்தை முன்பணமாக  கொடுத்தோம். ஆனால் நிகழ்ச்சி நடத்தவும், இட அனுமதியும் அரசிடமிருந்து வராததால் அந்த பணத்தை திரும்ப தருமாறு கடிதம் அனுப்பினோம்.

அதனை ஏற்று ஏ.ஆர் ரகுமான் கொடுத்த காசோலையை சம்பந்தப்பட்ட வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் காசோலை திரும்ப வந்தது. எனவே அவரிடம் இருந்து பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்து ஏ.ஆர் ரகுமானின் செயலாளர் செந்தில் வேலவன் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2018-ஆம் ஆண்டு இசை நிகழ்ச்சிக்காக வழங்கப்பட்ட பணத்தை திரும்ப செலுத்தி விட்டோம். தேவையில்லாமல் ஏ.ஆர் ரகுமானின் பெயரை கெடுக்கும் நோக்கில் மோசடி புகார் அளித்துள்ளனர் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தன் மீது போலீசில் புகார் அளித்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க நிர்வாகிகளுக்கு ஏ.ஆர் ரகுமான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் தன் பெயரை கெடுக்கும் நோக்கத்தோடு புகார் அளித்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க நிர்வாகிகள் 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி இல்லை என்றால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். இதனை மீறி செயல்பட்டால் சட்டரீதியாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏ.ஆர். ரகுமான் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஏ.ஆர் ரகுமானின் நோட்டீஸுக்கு இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் மலிவான விளம்பரத்திற்காக புகார் அளித்ததாக கூறுவது கண்டனத்திற்கு உரியது. பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர் ரகுமான் அச்சுறுத்தலில் ஈடுபடக்கூடாது. நாங்கள் மன்னிப்பு கேட்க முடியாது. இழப்பீடும் தர முடியாது. மருத்துவ சங்கத்திற்கு எதிராக அவதூறு பரப்பி வரும் ஏ.ஆர் ரகுமான் தான் 15 நாட்களுக்குள் 15 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும். மேலும் இசை நிகழ்ச்சிக்காக வாங்கிய 29.50 லட்சம் பணத்தை வட்டியுடன் திரும்பத் தர வேண்டும் என அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top