30000 அடி பறந்த விமானம்.. மழை பேஞ்சி தண்ணி ஒழுகும் பரிதாபம்.. சீட்டை காலி செய்து பக்கத்துக்கு சீட்டிற்கு சென்ற பயணிகள்..

By Begam

Updated on:

மழைக்காலங்களில் நாம் பஸ் அல்லது தொடர் வண்டிகளில் (Train) பயணித்திருப்போம். அப்பொழுது குறிப்பாக அரசு பேருந்துகளை எடுத்துக் கொண்டால் அதில் கொஞ்சம் ஏதாவது ஓட்டைகள் மேற்பகுதியில் இருந்து சில சமயங்களில் ஒழுகுவதை நாம் பார்த்திருப்போம். அதன் வழியாக தண்ணீர் வந்து மக்கள் நனைவதை நாம் கண்டிருப்போம்.

 

   

இதே போல ஒரு சில சமயங்களில் தொடர் வண்டிகளிலும் ஏற்படுவது உண்டு. ஆனால் தற்பொழுது விசித்திரமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது 30000 அடி உயரத்தில் பறக்கும் ஏர் இந்தியா விமானம் ஒன்றில் மழை நீர் மேற்பரப்பில் இருந்து கசிந்து ,விமானத்தில் உள்ள பயணிகளின் மீது விழுந்துள்ளது.

இதை நீங்க சொன்னால் நம்புவீர்களா..? என்னது விமானதுக்குள்ள மழையா..? ஆச்சரியமா இருக்கு தானே. இந்நிகழ்வை  ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவானது  இணையத்தில் படுவைரலாக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் முதன்முறையாக மழை பெய்யும் பொழுது, இப்படி தண்ணீர் ஒழுகுவதை நாம் இந்த வீடியோவின் மூலம் பார்க்க முடிகிறது.  இதோ அந்த வீடியோ…

author avatar