வசூலை வாரி குவித்த அரண்மனை 4.. சொல்லி அடித்த சுந்தர் சி.. இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா..?

By Mahalakshmi on மே 7, 2024

Spread the love

சுந்தர் சி இயக்கத்தில் கடந்த மே மூன்றாம் தேதி வெளியான திரைப்படம் அரண்மனை 4.  இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை வெற்றி வரும் நிலையில் 4-ம் நாளான இன்று வரை செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சுந்தர் சி.

   

90’களில் தனது சினிமா பயணத்தை தொடங்கிய சுந்தர் சி தொடர்ந்து 30 வருடங்களாக பல கமர்சியல் ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார். இவரது திரைப்படங்கள் என்றாலே வாய்விட்டு சிரித்து வரலாம் என்ற அளவிற்கு சிறப்பானதாக இருக்கும். இயக்கம் மட்டும் இல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்து வரும் சுந்தர் சி பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கின்றார்.

   

இடையில் சில காலம் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த இவர் கலகலப்பு என்ற திரைப்படத்தின் மூலமாக மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு கொடுத்தது. அதைத் தொடர்ந்து அரண்மனை திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டு கொடுத்தது. இதனால் தொடர்ந்து அரண்மனை 2, அரண்மனை 3 போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார். தற்போது அரண்மனை படத்தின் நான்காவது பாகத்தையும் இயக்கியிருந்தார் சுந்தர் சி.

 

இந்த திரைப்படத்தில் சுந்தர் சி ஹீரோவாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க ராசி கண்ணா, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். அதிலும் தமன்னாவின் நடிப்பு கிராபிக் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக இருந்ததாக மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

அது மட்டும் இல்லாமல் ஹிப்பாப் ஆதியின் இசையும் மிகப்பெரிய ப்ளஸ் ஆக அமைந்திருந்தது. படம் வெளியான நாளிலிருந்து மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் தற்போது வரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அரண்மனையை நான்கு திரைப்படம் கடந்த நான்கு நாட்களில் 22 கோடிக்கும் மேல் வசூல் செய்த பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

அதன்படி, முதல் நாளில் 4.65 கோடி வசூலும், இரண்டாவது நாளில் 6.65 கோடி வசூலும், மூன்றாவது நாளில் 7.85 கோடி வசூலும், நான்காவது நாளில் மூன்று கோடி வசூலும் செய்துள்ளது. மொத்தம் உலகம் முழுவதும் 22 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.