தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் தங்கள் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி நடித்து கல்லா கட்டுவார்கள். பின்னர் மார்க்கெட் போன பின்னர் அக்கா, அம்மா என டெம்ப்ளேட் நடிகைகளாகி ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துவார்கள். ஆனால் ஒரு சிலர்தான் விதிவிலக்காக கொடுக்கும் எல்லா பாத்திரங்களையும் அதன் தன்மையை உணர்ந்து நடித்து அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுப்பார்கள்.
அப்படிப்பட்ட ஒருவர்தான் நடிகை ஊர்வசி. தமிழ் சினிமாவில் பாக்கியராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. அந்த படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற அடுத்தடுத்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
1980களில் தொடங்கி 90களில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தார். தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இவர் நடித்திருக்கின்றார். அவர் நடித்த வேடங்களில் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கமலுடன் இணைந்து நடித்த திரிபுரசுந்தரி என்ற பாத்திரம் ரசிகர்களின் நெஞ்சில் இன்றளவும் நிலைத்து நிற்கும் ஒன்றாகும்.
அதே போல ஹீரோயின் வாய்ப்பு குறைந்த போது அம்மா வேடங்களில் நடித்தாலும் அதிலும் முத்திரைப் பதித்தவர். அவர் அம்மாவாக நடித்த சிவா மனசுல சக்தி முதல் தற்போதைய ஜெ பேபி வரை அதற்கான உதாரணம். இந்நிலையில் ஊர்வசியின் நடிப்பைப் பார்த்து பொறாமைப்பட்ட ஒரு நடிகர் அவரைக் கன்னத்திலேயே அறைந்துவிட்டாராம்.
இதுபற்றி சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறிய தகவல் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. அந்த ஹீரோவின் பெயரைக் குறிப்பிடாமல் “ஒரு படத்தில் ஊர்வசி நடித்த போது அந்த ஹீரோவை விட சிறப்பாக நடித்துவிட்டாராம். அதனால் பொறாமையான அந்த நடிகர் அவரை டார்ச்சர் செய்து ஒரு கட்டத்தில் அவரை கன்னத்திலேயே அறைந்துவிட்டார்” எனக் கூறியுள்ளார். இதையடுத்து அந்த ஹீரோ யாராக இருக்கும் என ரசிகர்கள் விவாதம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.