Categories: சினிமா

‘சிவகார்த்திகேயன் இப்படிபட்டவர் தான்’… இமானின் முன்னாள் மனைவி அளித்த பேட்டி …! வெளிச்சத்திற்கு வந்த உண்மை…

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள படம் ‘அயலான்’. இந்த படத்தை நேற்று, இன்று, நாளை படத்தின் இயக்குநரான ஆர். ரவிக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை 24 பிரேம் நிறுவனம் தயாரித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, இஷா கோபிகர், பால சரவணன் என் பலர் நடித்துள்ளனர். ஏ. ஆர் ரஹ்மான் படத்திர்கு இசையத்துள்ளார். இத்திரைப்படம்  பொங்கல் ட்ரீட்டாக வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும் அதனால், இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம் என்றும் அதுகுறித்து, வெளிப்படையாக சொன்னால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் என்றும் இமான் கூறி திடீரென அதிர்ச்சியை கிளப்பியுள்ளார் இசையமைப்பாளர் இமான்.

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் டி இமான். சிறு வயது முதல் முறையாக இசையை பயின்று சர்ச் நட்சத்திர ஹோட்டல் போன்றவற்றில் பாடல்களை பாடி, பின்னர் படங்களுக்கு இசையமைக்க தொடங்கினர். குறிப்பாக இவர் சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா போன்ற திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்து இருக்கின்றார்.

சிவகார்த்திகேயன் மற்றும் டி. இமான் இருவரின் காம்போவில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ஹிட்டுக் கொடுத்துள்ளது. ஆனால் இருவரும் கடந்த சில வருடங்களாக பேசிக்கொள்வதில்லை. சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த டி இமான் இதைப்பற்றி பேசி இருந்தார் அதாவது சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை நான் நன்றாக அறிவேன். அவர் படங்களில் என்னுடைய பாடல்கள் அனைத்தும் நன்றாக ஹிட் கொடுத்துள்ளது. ஆனால் அவர் செய்த துரோகத்தை என்னால் மன்னிக்க முடியாது .அதை தன்னால் வெளியில் சொல்ல முடியாது. அப்படி கூறினால் எனது குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். அவரை மன்னித்தாலும், அவர் செய்த துரோகத்தை நான் கட்டாயம் மறக்கவே மாட்டேன். இந்த பேட்டியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், ‘சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார்’ என்று இமான் குற்றம் சாட்டியிருப்பதை, இமான் விவாகரத்துக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து பிரபல ஊடகம் ஒன்றுக்கு ,  இமானின் முதல் மனைவி மோனிகா ரிச்சர்ட் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பேட்டியில்  அவர் கூறியதாவது,

‘சிவகார்த்திகேயன் எங்களோட குடும்ப நண்பர். ரொம்ப டீசன்ட்டான மனிதர். இமானுக்கும் அவருக்கும் நல்ல நட்பு உண்டு. நண்பர் என்ற அடிப்படையில, எங்கக் குடும்பத்துமேல அக்கறையா இருப்பாரு. என் மகள்களுக்கும் அவரைப் பிடிக்கும். அதனாலதான், எங்களுக்குள்ள விவாகரத்து நடக்கக்கூடாதுன்னு சமாதானம் பேசி பஞ்சாயத்துப் பண்ணி வைக்க வந்தார். ஒரு குடும்பம் சிதறிடக்கூடாதுங்குற நல்லெண்ணத்துல நாங்க ஒற்றுமையா வாழணும்னு நினைச்சு சமாதான முயற்சிகளையும் எடுத்தார். இமானுக்கு இப்போ, பட வாய்ப்பு இல்லைன்னு இப்படியெல்லாம் பேசுறார். விவாகரத்துக்குப்பிறகு, 30 பேருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு சுயமா முன்னேறி என் மகள்களோட சந்தோஷமாக இருக்கேன்’ என்று கூறி உண்மையை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.

Begam

Recent Posts

BREAKING: “ஐந்து பிஞ்சுகள் சிதைக்கப்பட்ட கொடூரம்”… சிவகங்கை விறகு வெட்டும் தொழிலாளிக்கு 5 தூக்கு தண்டனை… அதிரடி தீர்ப்பு…!

சிவகங்கை மாவட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை இழைத்த வழக்கில், விறகு வெட்டும் தொழிலாளிக்கு ஐந்து தூக்கு…

37 seconds ago

“ஈரான் போர்: பெருசா ஏதோ நடக்கபோகுது”… உலகை உலுக்கும் கீதா கோபிநாத்தின் ட்வீட்… இந்தியாவுக்கு ஆபத்தா..?

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முன்னாள் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத், ஈரான் மோதல் குறித்து விடுத்துள்ள எச்சரிக்கை…

8 minutes ago

“விஜய்யால் திமுகவுக்கு ஆபத்தா?”…. ஸ்டாலின் கையில் இருக்கும் அந்த ‘சீக்ரெட்’ ரிப்போர்ட் – அதிரவைக்கும் பின்னணி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், அதிகரித்துள்ள வாக்கு சதவீதமும் இளைஞர்களின் எழுச்சியும் அரசியல் களம் எத்தகைய…

16 minutes ago

“யார் யாருக்கு அமைச்சர் பதவி?”… ஸ்டாலின் மேஜைக்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்.. சபரீசனின் ‘சீக்ரெட் அசைன்மென்ட்’.. வெளியான பகீர் தகவல்..!

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே, முதல்வர் ஸ்டாலினின் கொடைக்கானல் பயணம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. கடந்த…

23 minutes ago

விஜய்க்கு வந்த ‘திடீர்’ கடிதம்: அதிரடி காட்டிய பீட்டா… தவெக-விற்குக் கிளம்பிய புதிய சிக்கல்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தனது தேர்தல் பிரசாரத்தின்போது கட்சி வண்ணங்கள் பூசப்பட்ட புறாக்களைப் பறக்கவிட்டது தற்போது…

29 minutes ago

20 ஆண்டுகால சாதனையை முறியடித்த 85% வாக்குப்பதிவு… யாருக்கு விழப்போகிறது மரண அடி?… 2026 தேர்தலில் இளைஞர்கள் காட்டிய ருத்ரதாண்டவம்..!

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிந்துள்ள நிலையில், முன் எப்போதும் இல்லாத அளவாகப் பதிவாகியுள்ள 85 சதவீத வாக்குப்பதிவு மாநில…

37 minutes ago