சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘கயல்’. இந்த சீரியலில் கயல் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை சைத்ரா ரெட்டி. அப்பாவினால் கைவிடப்பட்ட தனது குடும்பத்தை ஒரு மூத்த மகளாக எடுத்து நின்று, குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய தினமும் எப்படி போராடுகிறார் என்பதே இந்த சீரியலின் கதை.
இவருக்கு ஜோடியாக எழிலரசன் கதாபாத்திரத்தில் ராஜா ராணி சீரியல் சஞ்சீவ் நடித்துக் கொண்டு வருகிறார். நடிகை சைத்ரா ரெட்டி முதன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாண முதல் காதல் வரை’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதை தொடர்ந்து அவர் ‘யாரடி நீ மோகினி’ என்ற சீரியலில் ஸ்வேதா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
இவர் நடித்த ஸ்வேதா என்ற வில்லி கதாபாத்திரம் மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. இவர் சின்னத்திரையில் மட்டுமல்லது வெள்ளித்திரையிலும் கால் பதித்துள்ளார். தல அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்திலும், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான ‘வட்டம்’ திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை சைத்ரா ரெட்டி. இவர் அவ்வப்பொழுது தனது அழகிய புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் நடிகை சைத்ரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பசு மாட்டில் இருந்து பால் கறக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, ‘ஒரு நாள் 50 மாடுகள் சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என நினைத்தேன். தற்போது பால் பண்ணையை ஆரம்பித்து உள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார். நடிகை சைத்ரா ரெட்டிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு…
சிவகங்கை மாவட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை இழைத்த வழக்கில், விறகு வெட்டும் தொழிலாளிக்கு ஐந்து தூக்கு…
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முன்னாள் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத், ஈரான் மோதல் குறித்து விடுத்துள்ள எச்சரிக்கை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், அதிகரித்துள்ள வாக்கு சதவீதமும் இளைஞர்களின் எழுச்சியும் அரசியல் களம் எத்தகைய…
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே, முதல்வர் ஸ்டாலினின் கொடைக்கானல் பயணம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. கடந்த…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தனது தேர்தல் பிரசாரத்தின்போது கட்சி வண்ணங்கள் பூசப்பட்ட புறாக்களைப் பறக்கவிட்டது தற்போது…
2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிந்துள்ள நிலையில், முன் எப்போதும் இல்லாத அளவாகப் பதிவாகியுள்ள 85 சதவீத வாக்குப்பதிவு மாநில…