விஜய் டிவியில் மக்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில் கதையும் மிக சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. அம்மா பாசத்திற்காக ஏங்க கூடிய மகனுக்கு எப்போது அம்மா பாசம் கிடைக்கும் என்ற மைய கருத்தை கொண்டு சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள். விஜயாவின் நடன பள்ளியில் ஏற்பட்ட பிரச்சனை தற்போது காவல் நிலையத்தில் முத்து. அவரைக் காப்பாற்ற களமிறங்கிய மீனா அதிரடியாக உண்மையை கண்டுபிடித்த நிலையில் சிட்டி உண்மையை கூற ரோகிணியை போலீசார் கைது செய்து அழைத்துச் செல்கின்றனர்.
ஒரு வழியாக ரோகிணி காவல் நிலையத்திலிருந்து வெளிவந்த நிலையில் முத்து வயதான தாத்தா ஒருவரை அன்னதானம் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கின்றார். அங்கு விஜயா பெயரில் அன்னதானம் நடைபெறும் நிலையில் முத்துவும் அமர்ந்து தன்னுடைய அம்மாவின் பாசத்திற்கு ஏங்குகின்றார். முத்துவை பார்த்த விஜயா பேரதிர்ச்சி அடைந்து கோபத்தில் பார்க்கின்றார். அப்போது முத்து, அம்மா உங்க கையால சாப்பிடணும், பாட்டியிடம் சின்ன வயசுலயே விட்டுட்டீங்க, அதனால இங்க வைத்து எனக்கு சாப்பாடு போடுங்க அம்மா என்று கண் கலங்கும் விதமாக பேசுகின்றார். விஜயாவும் முத்துவுக்கு பரிமாற எமோஷனலான ப்ரோமோ வெளியாகி உள்ளது.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…