கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் முனீராபாத் போடி செல்லக்கி உட்பட்ட பூத கும்பா கிராமத்தை சேர்ந்தவர் தான் தியாமண்னா என்ற தொழிலாளி. இவருக்கு நேத்ராவதி என்ற மனைவி உள்ள நிலையில் தம்பதி இடையே குடும்ப பிரச்சனையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மறுபக்கம் நேத்ராவதிக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ஒரு நபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இது கணவருக்கு தெரிந்ததும் நேத்ராவதியை கண்டித்துள்ளார். இதனிடையே கடந்த ஜூலை 25ஆம் தேதியில் இருந்து கணவர் திடீரென காணாமல் போய்விட்டார் என நேத்ராவதி இடம் கேட்டபோது தனது கணவர் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலுக்கு சென்று இருப்பதாக கூறியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த தியாமன்னாவின் சகோதரர் இரண்டு நாட்களுக்கு முன்பு முனிராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் நேத்ராவதியை பிடித்து போலீசார் விசாரித்த போது தன் கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து நேத்ராவதி அவருடைய கள்ளக்காதலனான அதே கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவரான சாமண்ணாவை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து விசாரித்த போது நேத்ராவதிக்கும் சாமண்ணாவுக்கும் கடந்த பல ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இருவரும் சந்தித்து அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்த நிலையில் இது குறித்து தியாண்ணாவுக்கு தெரியவந்ததும் நேத்ராவதியை கண்டித்துள்ளார்.
கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்ய நேத்ராவதி கள்ளக்காதலுடன் சேர்ந்த திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த ஜூலை 25ஆம் தேதி தோட்டத்தில் வைத்து இரும்பு கம்பியால் தாக்கி தியாமண்ணாவை இரண்டு பேரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். பிறகு அவருடைய உடலை ஐந்து கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். பிறகு யாருக்கும் தெரியாமல் நேத்ராவதி வீட்டுக்கு வந்த நிலையில் கணவர் தர்மஸ்தலா கோவிலுக்கு சென்று இருப்பதாக கூறி வீட்டில் நாக பஞ்சமி பூஜையையும் நடத்தியது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து இருவரையும் போலீசார் சிறையில் அடைத்துள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…