Categories: சினிமா

சாலையில் சண்டை போடும் முத்து – மீனா.. விஜயாவுக்கு ஐஸ் வைக்கும் ரோகினி.. சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட்..!

Spread the love

சிறகடிக்க சீரியல் இன்றைய எபிசோடில், வீட்டில் இரண்டாவது நாள் கொலு பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ரோகினியும் மனோஜும் உள்ளே வர விஜயா நீ விளக்கேற்று என்று ரோகினியிடம் கூறுகிறார். உடனே முத்து தன் அப்பாவிடம், பாருப்பா இவ்வளவு கஷ்டப்பட்டு எல்லாம் ஏற்பாட்டையும் செஞ்சது மீனா இப்போ முதல் மரியாதை என்னவோ பார்லர் அம்மாவுக்கு கிடைக்குது என்று கூறுகிறார். மீனா விடுங்க ஜோதி யார் ஏற்றினாலும் எரியும் என்று கூறுகிறார். பிறகு மீனாவை ஒரு தாம்பூலம் எடுத்து வர சொல்லும் ரோகினி அதில் பழங்களை வைத்து தனது மாமியார் விஜயாவுக்கு ஒரு புடவையை கொடுக்கிறார். இதனைப் பார்த்து மகிழ்ச்சி அடையும் விஜயா ரோகினியை பாராட்டுகிறார். பிறகு முத்து ஏன் அப்பாவுக்கு எதுவும் வாங்கிட்டு வரவில்லை என்று கேட்க உடனே ரோகினி, இது பெண்களுக்கு நடைபெறும் பூஜை என்று அதனை சமாளிக்கிறார்.

பிறகு உடனே அந்த புது புடவையை மாற்றி வர வேண்டும் என்று ரோகினி தனது மாமியாரிடம் கூறுகிறார். பிறகு ரவியும் ஸ்ருதியும் கொலுவுக்கு இன்று பூஜைக்காக சமைத்துக் கொண்டு இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து பூஜையில் கலந்து கொள்ள மீனாவுடன் பூக்கட்டும் பெண்கள் அனைவரும் வீட்டிற்கு வருகின்றனர். அவர்களை வரவேற்று மீனா அமர வைக்கும் நிலையில் அதில் மூன்று பெண்கள் பூஜையில் வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகளை தொட்டுப் பார்க்கின்றனர். அப்போது அங்கு வரும் விஜயா இதை எல்லாம் தொடாதீங்க உங்களுக்கு இது நான் என்னன்னு தெரியுமா போய் தூரமா உட்காருங்க என்று அவர்களை அவமானப்படுத்துகிறார். உடனே விஜயாவின் கணவர் அவரை அழைத்து கண்டிக்கிறார். இதனைத் தொடர்ந்து பூஜை நடைபெறும் நிலையில் பூஜை முடிந்ததும் ரோகிணி ஒரு போர்டை கொண்டு வந்து அதனை ஓபன் செய்து வைக்குமாறு விஜயாவிடம் கூறுகிறார்.

அதனைத் திறந்து வைத்ததும் அதில் V beautician course என்று இருக்கும் நிலையில் தான் புதிதாக ஆன்லைன் கிளாஸ் எடுக்க போவதாக ரோகினி கூறுகிறார். நீங்கள் மேலும் மேலும் உயரத்திற்கு செல்வீர்கள் என்று விஜயா அவர்களை பாராட்டுகிறார். பிறகு அனைவருக்கும் மீனா பிரசாதம் வழங்கும் நிலையில் அதனை அவருடைய பூக்கட்டும் கடையில் இருக்கும் பெண்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது விஜயா தினமும் சாப்பாடு கிடைக்கும் என்பதற்காக இப்படி எங்கையாவது சென்று விடுவீர்களா இதற்கு முன்னாடி இப்படி எதையாவது பார்த்திருக்கீங்களா என்று அவமானப் படுத்துகிறார். இதனைக் கேட்டு கோபமடையும் விஜயாவின் கணவர் அவரை திட்டுகிறார். பிறகு அங்கிருந்து அனைவரும் கிளம்ப மீனா கொழுக்கட்டையை எடுத்து விஜயாவிடம் கொடுத்து இதை சாப்பிட்டுக் கொண்டு இருங்கள் வாய் சும்மா இருந்தா எதையாவது பேசிகிட்டு தான் இருப்பீங்க என்று கூறுகிறார்.

உடனே விஜயாவின் கணவர் ஏமா மீனா உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா இத வச்சு அவ வாயை அடைக்க முடியுமா ஏதாவது சிமெண்ட் வச்சு தான் அவ வாயை அடைக்கனும் என்று கூறுகிறார். கோபத்துடன் விஜயா அங்கிருந்து கிளம்புகின்றார். இதனைத் தொடர்ந்து சாலையில் செருப்பு தைத்து பிழைத்துக் கொண்டிருக்கும் தாத்தா பாட்டிக்கு மீனாவும் முத்துவும் சாப்பாடு கொண்டு செல்கின்றன. அவர்களுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு பூஜைக்காக வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று முத்து கூற வேண்டாம் உங்கள் அம்மா திட்டுவாங்க அவங்கள அவமானப்படுத்த வேண்டாம் என்று மீனா கூறுகிறார்.

இவர்கள் இருவரும் சத்தம் போட்டு சாலையில் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு இருப்பவர்கள் இவர்கள் உண்மையாகவே சண்டை போடுவதாக நினைத்து இருவரையும் திட்டுகின்றனர். பிறகு முத்து அவர்களை திட்டி விட்டு அங்கிருந்து மீனாவை அழைத்துக் கொண்டு கிளம்புகிறார். இதனைத் தொடர்ந்து ரோகிணியும் அவருடைய தோழி வித்யாவும் அடுத்த பிளான் பற்றி யோசித்து கொண்டு இருக்கின்றனர். அப்போது ரோகினி வீட்டில் நாளை ஒரு நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்போகிறேன் அந்த சமயத்தில் நீ எப்படியாவது முத்துவிடம் பேசி வீடியோ எடுக்க வேண்டும் என்று கூறி போனை வாங்கி விடு, வீடியோவை எனக்கு அனுப்பு என்று கூறி பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Nanthini

Recent Posts

“மறைக்கப்பட்ட மரணம்..” வெளிவந்த வரதட்சணை கொடுமை..! ஒரு மாதத்திற்குப் பிறகு கல்லறையைத் தோண்டிய போலீஸ்.. பீகாரில் பயங்கரம்…!

பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…

13 seconds ago

“கதறிய மாமியார்.. விடாத மருமகன்”… அடுத்த சில நிமிடங்களில் நடந்த கொடூரம்… நள்ளிரவில் மருமகன் செய்த பகீர் காரியம்….!

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…

6 minutes ago

வகுப்பறையா..? படுக்கை அறையா..? படுத்துக்கொண்டு ஹாயாக ரீல்ஸ் பார்க்கும் ஆசிரியை… அரசுப்பள்ளியில் நடந்த அதிர்ச்சி..!!

சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…

14 minutes ago

அட்சய திருதியை 2026… தங்கம் வாங்குவதை விட பல மடங்கு பலன் தரும் ‘இந்த’ 3 பொருட்கள்… உடனே இத வாங்கி வைங்க…!

அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…

16 minutes ago

“மட்டன் வேகவே இல்லை” நண்பனின் முன் மனைவியை கேவலமாக திட்டிய கணவர்… மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…

16 minutes ago

“கொலை செய்துவிட்டேன்” பிணத்தின் அருகே அமர்ந்து கதறல்… காம வெறிக்கு பலியான பாசம்..? ஹோட்டலில் மாமாவை துடிக்க துடிக்க சிதைத்த இளம்பெண்..!!!

ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…

19 minutes ago