#image_title
சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் மீனாவுக்கு ஆர்டர் கிடைத்ததனால் பிரியாணி செய்து சமைத்து சாப்பிட்டு இருக்கிறார்கள். ரோகினியின் மலேசியா மாமாவாக இருந்தவர் ரோகினி இடம் நான் மாட்டினால் உண்மையை கூறி விடுவேன் என்று சொல்கிறார். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.
இன்றைய எபிசோடு மிகவும் கலகலப்பாக சென்றது. மனோஜும் விஜயாவும் கோவிலில் நேர்த்தி கடன் செய்தனர். மிகவும் காமெடியாக இந்த காட்சிகள் எல்லாம் சென்றது. அந்த நேரத்தில் மீனாவும் முத்துவும் கோவிலுக்கு வர இவர்கள் செய்யும் காமெடிகளை வீடியோவாக எடுத்துவிட்டு வீட்டுக்கு செல்கின்றனர்.
வீட்டிற்கு சென்று முத்து அனைவரையும் அழைத்து டிவியில் அந்த வீடியோவை போட்டு காட்டுகிறார். அண்ணாமலையிலிருந்து ஸ்ருதி வரை அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். மனோஜ் எல்லாரும் சிரிக்காதீங்க என் கடைக்கு செய்வினை வச்சுட்டாங்க அதனால தான் நான் பரிகாரம் பண்ணேன் என்று சொல்கிறார்.
உடனே அண்ணாமலை ஏன்டா நீ எல்லாம் படிச்சியா இல்லையா இது எல்லாம் மூடநம்பிக்கைடா. மூணு முட்டைல எல்லாம் செஞ்சுறலாம்னா எதுக்குடா உலகத்துல இவ்ளோ பிரச்சனை நடக்குது என்று அண்ணாமலை கூறுகிறார். அந்த நேரத்தில் மனோஜின் கடையில் வேலை பார்க்கும் பையன் வருகிறார்.
அந்தப் பையன் வந்து மனோஜிடம் நான் முட்டையை வச்சது யாருன்னு கண்டுபிடிச்சிட்டேன் சார் நம்ம பக்கத்து ஏடிஎம் ல வேலை பாக்குற ஒரு தாத்தா தான் நம்ம கடை பக்கமா மழைக்கு ஒதுங்கி இருக்காரு. போகும்போது முட்டையை மறந்து வச்சிட்டு போயிட்டாரு என்று சொல்கிறான். இதை பார்த்து மறுபடியும் வீட்டில் இருக்கும் அனைவரும் சிரிக்கின்றனர். இந்த காட்சிகள் எல்லாம் இன்னைக்கு செம காமெடியாக இருந்தது. பார்ப்பவரை சிரிக்க வைக்கும் படியாக இருந்தது.
அடுத்ததாக பார்வதியை பார்க்க மீனா செல்கிறாள். அப்போது பார்வதி பணம் விஷயத்தைப் பற்றி பேசுகிறார். அந்த ரெண்டு லட்சம் பணத்தை ரோகிணி தான் வந்து குடுத்தா மீனா. சத்தியமா அவ தான் கொடுத்தா எங்க அத்தையோட பிரச்சனையை முடிக்கணும் அப்படின்னு சொல்லி கொடுத்தா என்று கூறுகிறார். இதைக் கேட்ட மீனா மிகுந்த அதிர்ச்சி அடைகிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,…
இசைஞானி இளையராஜாவின் காப்புரிமை பெற்ற பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து பாய்ந்து வருகின்றன. அந்த வகையில்,…
கர்நாடக மாநிலம் மால்பே பகுதியைச் சேர்ந்த 41 வயதான பிரபல தொழிலதிபர் சந்தீப் சாலியன், நீர் விளையாட்டு உபகரணங்களை வாடகைக்கு…
ஆட்சி கவிழ்ப்பு புகார் தொடர்பான விசாரணைக்கு செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகிய இருவருமே இதுவரை போலீசில் ஆஜராகவில்லை…
விசிக தலைவர் திருமாவளவன் துணை முதலமைச்சர் பதவியை ஏற்க வேண்டும் என்று அக்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அவரது…
கோவையில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் சினிமா பாணியில் கடத்தப்பட்டு, பின்னர் கடத்தல் கும்பல் ஆளை மாற்றி கடத்தியதை உணர்ந்து அவரை…