san

மனோஜால் ஏற்பட்ட கலாட்டா… பார்வதியிடம் ரோகிணி பணம் கொடுத்ததை அறியும் மீனா… சிறகடிக்க ஆசையில் இன்று…

By admin on மார்கழி 3, 2024

Spread the love

சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் மீனாவுக்கு ஆர்டர் கிடைத்ததனால் பிரியாணி செய்து சமைத்து சாப்பிட்டு இருக்கிறார்கள். ரோகினியின் மலேசியா மாமாவாக இருந்தவர் ரோகினி இடம் நான் மாட்டினால் உண்மையை கூறி விடுவேன் என்று சொல்கிறார். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.

   

இன்றைய எபிசோடு மிகவும் கலகலப்பாக சென்றது. மனோஜும் விஜயாவும் கோவிலில் நேர்த்தி கடன் செய்தனர். மிகவும் காமெடியாக இந்த காட்சிகள் எல்லாம் சென்றது. அந்த நேரத்தில் மீனாவும் முத்துவும் கோவிலுக்கு வர இவர்கள் செய்யும் காமெடிகளை வீடியோவாக எடுத்துவிட்டு வீட்டுக்கு செல்கின்றனர்.

   

வீட்டிற்கு சென்று முத்து அனைவரையும் அழைத்து டிவியில் அந்த வீடியோவை போட்டு காட்டுகிறார். அண்ணாமலையிலிருந்து ஸ்ருதி வரை அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். மனோஜ் எல்லாரும் சிரிக்காதீங்க என் கடைக்கு செய்வினை வச்சுட்டாங்க அதனால தான் நான் பரிகாரம் பண்ணேன் என்று சொல்கிறார்.

 

உடனே அண்ணாமலை ஏன்டா நீ எல்லாம் படிச்சியா இல்லையா இது எல்லாம் மூடநம்பிக்கைடா. மூணு முட்டை எல்லாம் செஞ்சுறலாம்னா எதுக்குடா உலகத்துல இவ்ளோ பிரச்சனை நடக்குது என்று அண்ணாமலை கூறுகிறார். அந்த நேரத்தில் மனோஜின் கடையில் வேலை பார்க்கும் பையன் வருகிறார்.

அந்தப் பையன் வந்து மனோஜிடம் நான் முட்டையை ச்சது யாருன்னு கண்டுபிடிச்சிட்டேன் சார் நம்ம பக்கத்து ஏடிஎம் ல வேலை பாக்குற ஒரு தாத்தா தான் நம்ம கடை பக்கமா மழைக்கு ஒதுங்கி இருக்காரு. போகும்போது முட்டையை மறந்து வச்சிட்டு போயிட்டாரு என்று சொல்கிறான். இதை பார்த்து மறுபடியும் வீட்டில் இருக்கும் அனைவரும் சிரிக்கின்றனர். இந்த காட்சிகள் எல்லாம் இன்னைக்கு செம காமெடியாக இருந்தது. பார்ப்பவரை சிரிக்க வைக்கும் படியாக இருந்தது.

அடுத்ததாக பார்வதியை பார்க்க மீனா செல்கிறாள். அப்போது பார்வதி பணம் விஷயத்தைப் பற்றி பேசுகிறார். அந்த ரெண்டு லட்சம் பணத்தை ரோகிணி தான் வந்து குடுத்தா மீனா. சத்தியமா அவ தான் கொடுத்தா எங்க அத்தையோட பிரச்சனையை முடிக்கணும் அப்படின்னு சொல்லி கொடுத்தா என்று கூறுகிறார். இதைக் கேட்ட மீனா மிகுந்த அதிர்ச்சி அடைகிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.