#image_title
சிறகடிக்க ஆசை தொடரில் நேற்று மனோஜின் ஷோரூமுக்கு செய்வினை வைத்து இருக்கிறார்கள் என்று கூறியவுடன் அதை எடுப்பதற்கு என்ன செய்யலாம் என்று ஒவ்வொரு ஜோசியராக பார்த்துக் கொண்டிருக்கிறார் மனோஜ். வித்யாவின் போன் செருப்பு தைக்கும் பாட்டியிடம் கிடைத்து விடுகிறது. அது முத்துவின் போன் தான். அடுத்து மீனாவை பாலோ செய்து வரும் ஒரு நபர் என்று அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.
இன்றைய எபிசோடில் மனோஜ் வீட்டில் தனது அம்மாவை தனியாக ரூமுக்குள் அழைத்து ஷோரூம் இல் நடந்தது ஜோசியரை பார்த்தது எல்லாம் சொல்லுகிறான். அடுத்ததாக தன் அம்மாவிடம் அம்மா நீங்களும் நானும் இந்த செய்வினை எடுக்கணும்னா கோயில் நேர்த்தி கடன் செய்யணும். வேப்பிலையை கட்டி சுத்தி வந்து தீச்சட்டி எடுக்கணும் என்று கூறுகிறான்.
உடனே விஜயா அதெல்லாம் என்னால முடியாது என்னால சாப்பிடாமல் இருக்க முடியாது. எனக்கு இதுல நம்பிக்கை கிடையாது என்று கூறிக் கொண்டிருக்கிறாள். மனோஜ் அம்மா நான் பிசினஸ்ல நல்லா வரணும்னா நீங்க செஞ்சுதாம்மா ஆகணும் என்று கூறிக்கொண்டே வெளியே வரும் போது ஃபேன் நேராக விஜயா முன்னாடி விழுந்து விடுகிறது. உடனே ரோகினி ஆன்ட்டி நான் கூட இதை நம்பல இப்ப பாருங்க கெட்டதா நடக்கிறது ஜஸ்ட் மிஸ்ல உங்க தலை தப்பிச்சது என்று கூறியவுடன் அரை மனதாக விஜயா ஒத்துக் கொள்கிறாள்.
அதற்கு அடுத்ததாக மீனவை பாலோ செய்து வரும் நபர் முத்து கார் செட்டில் போய் முத்துவிடம் அந்த பொண்ணுகிட்ட பேசுறேன்னு சொதப்பிட்டேன் அண்ணா என்று கூறுகிறான். உடனே முத்து மறுபடியும் ஐடியா கொடுக்கிறான். இது என்னடா தேவையில்லாத ட்ராக் என்பது போல் தான் பார்வையாளர்களுக்கு இருக்கிறது. அடுத்து வீட்டில் மோட்டர் வேலை செய்யாமல் தண்ணீர் இல்லாமல் இருக்கிறது. காலையில் அனைவரும் வீட்டில் கூடி தண்ணீர் வரவில்லை என்று சொல்கிறார்கள்.
அப்போது முத்து மெக்கானிக் போன் செய்து வர வைக்கிறான். அதுவரைக்கும் கீழே இருந்து தண்ணீர் எடுக்கலாம் என்று ஒவ்வொருவராக கீழிருந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். மெக்கானிக் வந்து நான் மீட்டர் ஆஃப் பண்ணி இருக்கேன். யாரும் போட வேண்டாம் சொல்லுங்க என்று முத்துவிடம் சொல்லிட்டு போகிறான். அந்த நேரத்தில் மனோஜ் வந்து மீட்டரை ஆன் செய்துவிட மேல சுவிட்ச் போட இருந்த விஜயாவிற்கு ஷாக் அடிக்கிறது. பார்வதி ரோகிணி என அனைவரும் ஷாக் அடித்து கொண்டு இருக்கிறது. இறுதியாக மனோஜம் சேர்ந்து விடுகிறான். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…
தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…