#image_title
அறிமுக இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி செல்வராகவன் நட்டி சானியா ஐயப்பன் பாலாஜி சக்திவேல் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் சொர்க்கவாசல். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்தப்படம் எப்படி இருக்கிறது இதன் முழு விமர்சனம் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
சொர்க்கவாசல் படம் நிஜ சம்பவங்களை அடிப்படையாக கொண்ட திரைப்படமாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சிறைக் கலவரத்தை விசாரிக்கும் வகையில் கதை ஆரம்பிக்கிறது. ஆர் ஜே பாலாஜி தனது அம்மா மற்றும் அன்புக்குரிய மனைவியுடன் சிறிய உணவு விற்பனையாளராக அமைதியாக வாழ்க்கை வாழும் ஒரு மனிதராக இருந்து வருகிறார். அவரது வாழ்க்கை சுமூகமாக போகும் நேரத்தில் ஒரு கொலையில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுடன் எந்த தவறும் செய்யாத ஆர் ஜே பாலாஜியும் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்கிறார்.
சிறையில் மற்ற கைதிகளுடன் ஏற்படும் சண்டை சச்சரவுகள் உள்ளே ஏற்கனவே இருக்கும் அரசியல்வாதிகளால் ஏற்படும் தொந்தரவுகள் என அத்தனை பிரச்சனைகளை சமாளித்து ஆர் ஜே பாலாஜி நிரபராதி என்று நிரூபிப்பாரா சிறையை விட்டு எப்படி வெளியே வருவார் என்பது மீதி கதை.
இந்த படத்தின் திரைக்கதைக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து இருக்கின்றனர். வழக்கம்போல ஆர்.ஜே பாலாஜி நகைச்சுவையும் சமூகத்துக்கு தேவையான கருத்துகளையும் சொல்பவர் போல் இல்லாமல் இந்த படத்தில் அவரை முற்றிலும் வேறு ஒரு ஆர் ஜே பாலாஜியாக வேறு ஒரு பரிமாணத்தில் பார்க்க முடிகிறது. முதல் பாகம் முழுவதும் செல்வராகவன் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கருணாஸ்க்கும் இந்த படம் முக்கியமாக இருக்கும். சிறை கைதிகள் ஒன்று சேர்ந்து சிறை காவலர்களை எதிர்ப்பது உள்ளே கொலைகள் செய்வது போன்ற சம்பவங்கள் லாஜிக் மீறல்கள் போல் தான் இருக்கிறது. ஆர் ஜே பாலாஜியின் அம்மாவாகவும் மனைவியாகவும் நடிப்பவர்கள் தங்களது கதாபாத்திரங்களை சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். படத்தின் பிஜிஎம் நன்றாக அமைந்திருக்கிறது. ரத்தம் காயம் வன்முறையை விரும்பாதவர்களுக்கு இந்த படம் எடுபடாமல் போகலாம். மொத்தத்தில் சொர்க்கவாசல் சிறைவாசிகளுக்கான வலியை எடுத்துக் கூறுவதாக இருக்கிறது.
"அதிமுக, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து மூன்று வாரங்களுக்கு மேலாகிவிட்டது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச்…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…
மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்சரண் - ரீட்டா தம்பதிக்கு லவ்குஷ் நகர் அரசு சுகாதார மையத்தில்…
வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஓய்வுபெற்ற இந்துப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை…
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கவின் ஜெனில், தனது வீட்டில் தூக்கிட்டுத்…
சட்டத்தின் பார்வையில், நீண்டகாலமாகத் தொடரும் லிவ்-இன் உறவுமுறை என்பது முறைப்படியான திருமணத்திற்கு இணையானதாகவே கருதப்படுகிறது. வயது வந்த இருவர் பரஸ்பர…