16 வயதில் விபரீத முடிவு… பெற்றோரைக் கதறவிட்ட மாணவன்… உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்… இளைஞனின் தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து பரபரப்பு…!!

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கவின் ஜெனில், தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சம்பவத்தன்று பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலிருந்த அவர், தனது பாட்டிக்குத் தெரியாமல் வீட்டின் பின்பக்கமாகச் சென்று இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்; ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இந்த மரணம் குறித்து மாணவனின் தாயார் அளித்த புகாரில், சக மாணவியிடம் பேசியதற்காக ஆசிரியர்கள் கடுமையாகக் கண்டித்ததால்தான் தனது மகன் மன உளைச்சலுக்கு ஆளாகித் தற்கொலை செய்துகொண்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார். இதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே, ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவனின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்துச் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், சக மாணவர்களும் போராட்டத்தில் குதித்ததால் காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து அப்புறப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இருப்பினும், போலீஸார் நடத்திய விசாரணையில் தற்கொலைக்கான உண்மைக் காரணம் தெரியவந்துள்ளது. உயிரிழந்த மாணவன், தன்னுடன்பயிலும் மாணவியுடன் வெளியே சென்றபோது பேருந்தில் வைத்து நெருக்கமாக எடுத்த வீடியோ ஒன்றை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார். இதுகுறித்து ஆசிரியர்கள் விசாரித்ததையடுத்து, அந்த மாணவி மாற்றுச் சான்றிதழ் பெற்றுக்கொண்டு வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகே மாணவன் தற்கொலை செய்துகொண்டதும், அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருவதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Gayathri

Recent Posts

“இப்படி பேச அசிங்கமா இல்லையா?….. நாவடக்கம் தேவை செங்கோட்டையன்”…. கொதித்தெழுந்த மதிமுக… தமிழ்நாடு அரசியலில் திடீர் பரபரப்பு….!

தவெக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் சமீபத்திய பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து, மதிமுக பொருளாளர் மு. செந்திலதிபன் காரசாரமான கண்டன அறிக்கை…

3 minutes ago

மகளிருக்கு ஜாக்பாட்…. உரிமைத் தொகையை உயர்த்தும் CM விஜய்?…. அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!

மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி ஆதாரங்களைப் பெற்று, மகளிருக்கான உரிமைத் தொகையை முதல்வர் விஜய் உயர்த்தி வழங்குவார் என…

9 minutes ago

“தவெகவுடன் அதிமுக  கூட்டணி…. இணைந்து 3 வாரம் ஆச்சு”…. புதுக்கோட்டையில் கு.ப.கிருஷ்ணன் போட்ட வெடி…. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

"அதிமுக, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து மூன்று வாரங்களுக்கு மேலாகிவிட்டது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச்…

13 minutes ago

அட கொடுமையே… எனக்கு அந்தப் பொண்ணு வேணும்… மாமா வீட்டிற்குச் சென்று… பெண் கேட்ட சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை… சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்…!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…

54 minutes ago

கடவுளே… இது என்ன அதிசயம்?… 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தை… வியப்பில் மருத்துவர்கள்… இணையத்தை உலுக்கும் வைரல் சம்பவம்…!

மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்சரண் - ரீட்டா தம்பதிக்கு லவ்குஷ் நகர் அரசு சுகாதார மையத்தில்…

54 minutes ago

அதிர்ச்சி..! ஒரே குடும்பத்தில் 4 பேர் கழுத்து நெரித்துக் கொலை… போதை இளைஞர்களின் கொடூர செயல்… போலீஸ் விசாரணையில் அம்பலமான கொடூரம்…!!

வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஓய்வுபெற்ற இந்துப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை…

1 மணத்தியாலம் ago