பொதுமக்களுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனையில் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், மத்திய அரசு அதிரடியான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பெட்ரோல் விற்பனை நிலையங்களில் மொத்தமாக எரிபொருள் விற்பனை செய்ய 90 நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான எரிபொருளை, தங்களின் ஆலை வளாகங்களுக்குள் இருக்கும் பிரத்யேக மொத்த விற்பனை மையங்களில் இருந்து மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்தமாகச் செல்லும் எரிபொருள் நுகர்வு தடுக்கப்பட்டு, சாதாரண வாகன ஓட்டிகளுக்குத் தங்கு தடையின்றி பெட்ரோல், டீசல் கிடைப்பது உறுதி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இத்துடன், சில்லறை விற்பனை நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்த மேலும் சில முக்கியக் கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, பெட்ரோல் நிலையங்களில் ஒரு வாகனத்திற்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக 200 லிட்டர் டீசல் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த டீசல், வாகனத்தின் எரிபொருள் டேங்க்கில் அல்லது பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பின் அங்கீகாரம் பெற்ற கொள்கலன்களில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்றும், அதனை வாங்கி மீண்டும் சட்டவிரோதமாக மறுவிற்பனை செய்யக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 90 நாட்களுக்கு அமலில் இருக்கும் இக்கட்டுப்பாடுகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதையும், கள்ளச்சந்தை மற்றும் பதுக்கல் போன்ற முறைகேடுகள் நடக்காமல் இருப்பதையும் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகக் கண்காணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் நடத்தப்பட்ட ரூ.35 கோடி குதிரை…
தமிழக அரசியல் களம் எப்போதும் திமுக, அதிமுக என்ற இரு துருவங்களை மையமாகக்கொண்டே சுழன்று வந்துள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,…
நாக்பூரைச் சேர்ந்த ராஜேந்திர தெம்ரே என்ற ஆட்டோ ஓட்டுநர், தமக்குத் தற்செயலாகக் கிடைத்த கூடுதல் பணத்தைக் கொண்டு செய்த நற்செயல்…
சளி, இருமல், செரிமானக் கோளாறு போன்ற அன்றாட உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனடியாக மருந்துக்கடைகளுக்கும் மருத்துவமனைக்கும் ஓடுவதைத் தவிர்த்து, நம் வீட்டு…
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் இளையராஜாவுக்கு கொலை மிரட்டல்…
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள…