நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் விஜய்யை, தமிழகத்தைச் சேர்ந்த குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து அவர்களுக்கு ஆட்சியில் பங்கு வழங்கியதை பாஜக தலைமை விரும்பவில்லை என்ற தகவல் விஜய்க்கு கடத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தமிழகத்தில் காங்கிரஸை வளர்த்துவிடும் என்பதால், மத்திய அரசின் ஆதரவு தேவை எனில் காங்கிரஸிடமிருந்து தவெக விலகியிருப்பதே நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, அமித் ஷாவை சந்திக்க முடியாமல் போனதும், பிரதமர் மோடி சந்திப்பு 10 நிமிடங்களில் முடிந்ததும் விஜய் மீதான டெல்லி தலைமையின் அதிருப்தியை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகளுக்குப் பின் தவெக, அதிமுக-பாஜகவின் ஆதரவை நாடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் மதச்சார்பற்ற அரசை அமைக்க திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவைப் பெற்று முதலமைச்சரானார். தமிழகத்தில் நிலவும் பாஜக எதிர்ப்பு சூழலுக்கு மத்தியில், தங்களுக்குப் பக்கபலமாக இருக்கவும், டெல்லியில் குரல் கொடுக்கவும் ஒரு தேசியக் கட்சி தேவை என்ற நோக்கிலேயே விஜய் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தார். தவெகவின் சமூகப் பிரதிநிதித்துவ அடிப்படையிலான வேட்பாளர் தேர்வு, சாதி மற்றும் மதங்களைக் கடந்து மிகப்பெரிய வாக்கு அறுவடைக்கு வழிவகுத்ததே இந்த இரு வயது கட்சியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக திமுக நிர்வாகிகளால் பார்க்கப்படுகிறது.
விஜய்யின் அரசியல் வருகையால் திமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கிருஸ்துவ சமூகத்தின் வாக்குகள் முழுமையாக தவெக பக்கம் சாய்ந்துள்ளதோடு, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவுடன் பயணித்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் தனது கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளது. அறிவாலயத்தின் பலமாக இருந்த சிறுபான்மையினரின் வாக்குகள் தவெகவிற்குச் சென்றுள்ளதால், தங்களின் கட்டமைப்பில் கிருஸ்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, இழந்த சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டிய கட்டாயத்திற்கு திமுக தள்ளப்பட்டுள்ளது.
தமிழகப் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 200 கோடி ரூபாய் வரை மோசடி…
தற்போது பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, வரலாறு காணாத…
சமூக வலைத்தளமான 'X' தளத்தில் சுமன் ரஸ்தோகி என்பவரால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் லாரி விபத்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில்…
ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளை…
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி…
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள வூஸ்டர் நகரில் செயல்பட்டு வரும் எகானோ லாட்ஜ் என்ற மோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ…