#Breaking: நாடே அதிர்ச்சி… 7 வயது சிறுமியை கதற கதற கற்பழித்து கொன்று… பிளாஸ்டிக் டிரம்முக்குள் அடைத்த காமக்கொடூரன்….!

Spread the love

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதனப்பள்ளி அருகே உள்ள நீருகட்டு வாரி பகுதியைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளியின் மகளான ரிஷிகா பிரியா என்ற சிறுமி, வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது மாயமானார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, எதிர் வீட்டில் வசிக்கும் குல்வர்தன் (30) என்ற நபர் சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது. போதைக்கு அடிமையான அந்த நபர், சிறுமியைத் தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். பின்னர் கொடூரமான முறையில் சிறுமியின் உடலை ஒரு பிளாஸ்டிக் டிரம்முக்குள் மறைத்து வைத்திருந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரைக் கண்டதும் குற்றவாளி தப்பியோடிய நிலையில், அவரைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கொடூரச் செயலால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்களும் பொதுமக்களும் மும்பை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தினர். ஆந்திர மாநிலம் முழுவதையும் உலுக்கியுள்ள இந்தச் சம்பவம், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

Nanthini

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

3 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

3 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

3 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

4 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

4 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

4 மணத்தியாலங்கள் ago