2026-ல் ஆட்சியில் அமரப்போவது யார்?… இனி இந்த 3 தொகுதிகள் தான் டார்கெட்…. அரசியல் கட்சிகளை அலறவிடும் 60 வருட சென்டிமென்ட்…!

Spread the love

தமிழக அரசியலில் தேர்தல் வியூகங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கு இணையாக சில ‘சென்டிமென்ட்’களும் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள சில குறிப்பிட்ட தொகுதிகளில் எந்தக் கட்சி வெற்றி பெறுகிறதோ, அந்தத் தொகுதியைக் கைப்பற்றும் கட்சியே மாநிலத்தின் ஆட்சியையும் பிடிக்கும் என்பது கடந்த 60 ஆண்டு கால வரலாறாக இருந்து வருகிறது. 1967 முதல் 2016 வரை சுமார் எட்டு தொகுதிகள் இத்தகைய அரசியல் ராசி கொண்ட தொகுதிகளாகக் கருதப்பட்டன.

ஆரணி, சங்ககிரி, மேட்டூர், வீரபாண்டி, மொடக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம் மற்றும் வேடசந்தூர் ஆகிய எட்டு தொகுதிகளே அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. இந்தத் தொகுதிகளில் வெற்றி வாகை சூடும் கட்சியே புனித ஜார்ஜ் கோட்டையில் அரியணை ஏறும் என்பது எழுதப்படாத விதியாக இருந்து வந்தது. பெரிய அரசியல் தலைவர்கள் தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்கும் இடம் முதல் வேட்பாளர்களின் ஜாதகம் வரை பல விஷயங்களில் சென்டிமென்ட் பார்ப்பது வழக்கம் என்றாலும், தொகுதி ரீதியான இந்த வெற்றி கணிப்பு மிகவும் ஆச்சரியமான ஒன்றாகப் பார்க்கப்பட்டது.

இருப்பினும், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் இந்த எட்டு தொகுதிகளில் ஐந்து தொகுதிகளின் முடிவுகள் இந்த நீண்ட கால சென்டிமென்ட்டை மாற்றியமைத்தன. உதாரணமாக, ஆரணி, சங்ககிரி, மேட்டூர், வீரபாண்டி மற்றும் மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்ற போதிலும், தமிழகத்தில் திமுக ஆட்சியைப் பிடித்தது. இதன் மூலம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்த இந்த அரசியல் ராசி, ஐந்து தொகுதிகளில் தகர்க்கப்பட்டது.

தற்போது மீதமுள்ள நாமக்கல், ராமநாதபுரம் மற்றும் வேடசந்தூர் ஆகிய மூன்று தொகுதிகள் மட்டுமே இன்னும் அந்த 60 ஆண்டு கால சென்டிமென்ட்டைத் தக்கவைத்து வருகின்றன. 2021 தேர்தலிலும் இந்த மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுகவே ஆட்சியை அமைத்தது. எனவே, வரும் காலங்களிலும் தமிழக அரசியல் களத்தில் இந்த மூன்று தொகுதிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொகுதிகள் ‘ஆட்சியைத் தீர்மானிக்கும் தொகுதிகள்’ என்ற பெருமையை இன்றும் சுமந்து நிற்கின்றன.

Nanthini

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

4 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

4 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

4 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

5 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

5 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

5 மணத்தியாலங்கள் ago