அம்மா ப்ளீஸ், பாட்டியை அடிக்காதீங்க… மகன் கெஞ்ச கெஞ்ச மாமியாரை தாக்கிய மருமகள்… அதிர்ச்சியூட்டும் வைரல் வீடியோ…!

Spread the love

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கோத்தே கிராமத்தை சேர்ந்த குருபஜன்கவுர் என்பவருடைய கணவர் தொடக்கக்கல்வி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் நான்கு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். அதன் பிறகு குர்பஜன் கவுர் தன்னுடைய மகனின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சொத்துக்களை தன்னுடைய பெயரில் மாற்றி தர வேண்டும் என்று மருமகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று தகராறு முற்றிய நிலையில் மருமகள் மாமியாரை கொடூரமாக தாக்கியுள்ளார். தலைமுடியைப் பிடித்து இழுத்து மீண்டும் மீண்டும் தாக்கியுள்ளார். அப்போது சிறுவனாகிய அவரது மகன் அதிர்ச்சி அடைந்து, அம்மா பாட்டியை அடிக்காதீங்க என்று கெஞ்சியுள்ளான். ஆனால் மருமகள் எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக மாமியாரை தாக்கியுள்ளார்.

இதனால் வேதனை அடைந்த அந்த சிறுவன் தனது தாயார் பாட்டியை தாக்கும் காட்சிகளை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளான். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் அதிர்ச்சி அடைந்த இந்த பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள். அதே சமயம் இந்த சம்பவம் குறித்து பஞ்சாப் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

4 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

4 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

4 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

5 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

5 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

5 மணத்தியாலங்கள் ago