வடக்கு டெல்லியின் அசோக் விஹார் பகுதியில் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி தன்மீது ஆசிட் வீசப்பட்டதாக இளம் பெண் ஒருவர் போலீசீர் புகார் அளித்திருந்தார். ஓவியர் விஜேந்தர் மற்றும் அவருடைய உதவியாளர்கள் இந்த குற்றத்தை செய்ததாக அந்த பெண் கூறி இருந்தார். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வந்த நிலையில் ஆசிட் வீசப்பட்டது உண்மையில் நடக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டதாக கூறும் இளம் பெண் பழைய பகை காரணமாக இவ்வாறு செய்து உள்ளார். தனது குடும்பத்தினருடன் சேர்ந்து இந்த நாடகத்தை அவர் நடங்கேற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிறகு போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களை ஆய்வு செய்த பிறகு சம்பவம் நடந்த போது குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் அந்த இடத்தில் இல்லை என்பது தெரிய வந்தது. அந்தப் பெண்ணின் தந்தை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு இடையே தொடர்பாக பழைய தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் அந்த பெண் அவருடைய தந்தை, சகோதரர் மற்றும் மாமா ஆகியோருடன் இணைந்து ஒரு பொய்யான வழக்கில் அவர்களை சிக்க வைக்க இந்த சதித்திட்டத்தை தீட்டினர்.
மேலும் விசாரணையின் போது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஜிஜேந்திரனின் மனைவி, பெண்ணின் தந்தை அகில்கான் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார். இதனை பழிவாங்குவதற்கு ஆசிட் வீசப்பட்ட நாடகம் நடத்தப்பட்டதாக தெரிகிறது. தன் மீது ஆசிர் வீசப்பட்டதாக நம்ப வைக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேண்டி தனது கைகளில் கழிப்பறை கிளீனரை ஊற்றியதாக அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் போலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…