தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார். மாநில அரசின் மொத்த நிலுவைக் கடன் ரூ 10 லட்சம் கோடி அதிகரித்துள்ளதாகவும், இதற்கான வட்டி மட்டுமே ஆண்டுக்கு ரூ 67,000 கோடி செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, ஒவ்வொரு 1 ரூபாய் புதிய மூலதனச் செலவிற்கும் ரூ 2.26 புதிய கடன் பெறப்படுகிறது. போக்குவரத்துத் துறையைப் பொறுத்தவரை, அரசுப் பேருந்துகளை ஒரு கிலோமீட்டர் இயக்குவதற்கு ரூ 70.61 செலவாகும் நிலையில், பயணச்சீட்டு மூலம் வெறும் ரூ 25.97 மட்டுமே வருமானமாகக் கிடைக்கிறது. இதனால் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் அரசுக்கு ரூ 53.81 நட்டம் ஏற்படுகிறது.
செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், போக்குவரத்துக் கழகங்களுக்கு நாள்தோறும் கடுமையான நிதிப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் காரணமாக, 2011-12 நிதியாண்டில் ரூ 8,761 கோடியாக இருந்த ஒட்டுமொத்த கடனளவு, 2020-21ல் 381% ஆக உயர்ந்து ரூ 42,143.69 கோடியாக அதிகரித்தது. மேலும், 2026 ஆம் ஆண்டில் இந்த கடனளவு ரூ 72,667 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த பெரும் இழப்பின் ஒரு பகுதி, அரசால் வழங்கப்படும் டீசல் மானியம் மற்றும் மாணவர்களுக்கான இலவசப் பேருந்து பயணச் சலுகைக்கான மானியங்கள் மூலம் ஈடு செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், அடிக்கடி உயரும் டீசல் விலைக்கு ஏற்ப பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படாததால், மாநில போக்குவரத்து நிறுவனங்களின் நிதிப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவிலேயே அரசுப் பேருந்து கட்டணம் மிகக் குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். உதாரணமாக, விரைவுப் பேருந்துகளில் 10 கிலோமீட்டர் பயணிக்க ஆந்திராவில் ₹30 மற்றும் கேரளாவில் ரூ 20 வசூலிக்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் வெறும் ₹12 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. 2018-ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த 7 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில், அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மாநில போக்குவரத்து நிறுவனங்களின் மூலதன சொத்துக்களில் முதலீடு செய்ய வேண்டும் எனவும், லாபம் தரும் வழித்தடங்களை தனியாருக்கு தாரை வார்க்காமல் அரசே நேரடியாக இயக்கி வருவாயை ஈட்ட வேண்டும் எனவும் 2021 ஆம் ஆண்டு வெள்ளை அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…