பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்தினி (26). இவருக்கும் இவருடைய கணவர் குணசேகரனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 5 வருடங்களாகத் தன் கணவரைப் பிரிந்து, காரை சமத்துவபுரம் பகுதியில் தனது 9 வயது மகள் கீர்த்திஷாவுடன் நிஷாந்தினி தனியாக வசித்து வந்தார். இந்தச் சூழ்நிலையில், மணிவண்ணன் என்ற நபருடன் நிஷாந்தினிக்குக் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
நாட்கள் செல்லச் செல்ல, கள்ளக்காதலன் மணிவண்ணன் நிஷாந்தினியிடம் தனது குழந்தையை விட்டுவிட்டு, தனியாகத் தன்னுடன் வரும்படி கூறி வற்புறுத்தி, தொல்லை கொடுத்து வந்துள்ளார். கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்கும், அவர்களின் திருமணத்திற்கும் தனது 9 வயது மகள் கீர்த்திஷா இடையூறாக இருப்பதாக நிஷாந்தினி கருதியுள்ளார். இதன் காரணமாக, பெத்த தாய் என்றும் பாராமல் தனது சொந்த மகளையே கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
மகளைக் கொலை செய்த பிறகு, குழந்தை பேச்சு மூச்சின்றி இருப்பதாகக் கூறி காரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று நிஷாந்தினி நாடகமாடியுள்ளார். எனினும், சந்தேகமடைந்த மருத்துவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், கள்ளக்காதலுக்காகத் தாயே மகளைக் கொன்றது அம்பலமானது. இதனைத் தொடர்ந்து நிஷாந்தினியைக் கைது செய்த போலீஸார், தலைமறைவாக இருந்த அவரது கள்ளக்காதலன் மணிவண்ணனையும் தேடிப் பிடித்துக் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…