கடந்த மே 3ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது. ஆனால், தேர்வு நடப்பதற்கு ஒரு நாளைக்கு முன்பே வினாத்தாள்கள் கசிந்ததாகப் புகார்கள் எழுந்த நிலையில், சிபிஐ நடத்திய தீவிர விசாரணையில் முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டு நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வரும் ஜூன் 21ஆம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மறுதேர்வு நடப்பதையொட்டி, வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூன் 22ஆம் தேதி வரை டெலிகிராம் செயலியை தற்காலிகமாக முடக்கி மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும், டெலிகிராம் செயலியில் வரும் ஜூன் 30ஆம் தேதி வரை செய்திகளை ‘எடிட்டிங்’ செய்யும் வசதியும் முடக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்தத் தற்காலிகத் தடைக்கு, சிபிஎஸ்இ விடைத்தாள் முறைகேடுகளை முதன்முதலில் வெளிக்கொண்டு வந்த மாணவர் சார்த்தக் சித்தாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “தேசிய தேர்வு முகமையின் திறமையின்மை மற்றும் அதன் சொந்த நிர்வாகத் தோல்விகளை மூடிமறைப்பதற்காகவே, ஒட்டுமொத்த டெலிகிராம் செயலியையும் தடை செய்து மத்திய அரசு நாடகம் நடத்தியுள்ளது” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். நீட் மறுதேர்வுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், மத்திய அரசின் இந்த டெலிகிராம் தடை உத்தரவு மற்றும் அதற்கு எழுந்துள்ள விமர்சனங்கள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…