“டீச்சர் மேலேயிருந்து கல் விழுது” முன்பே குழந்தைகள் எச்சரித்தும் அலட்சியமாக இருந்த ஆசிரியர்கள்… பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல்..!!

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்திலுள்ள  அரசு பள்ளி  கூரை இடிந்து விழுந்ததில் ஏழு குழந்தைகள் பலியானார்கள். மேலும் பலரும் படுகாயம் அடைந்தார்கள் . காலை பிராத்தனைக்காக மாணவர்கள் கூடியிருந்த நிலையில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. கிராமவாசிகளின் உதவியோடு இடிபாடுகளில் சிக்கி இருந்த குழந்தைகள் மீட்கப்பட்டார்கள். இந்த சம்பவத்தில் அலட்சியமாக இருந்த ஐந்து ஆசிரியர்கள் மற்றும் ஒரு கல்வித்துறை அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டார் . இந்த பாலடைந்த கட்டடம் குறித்து ஏற்கனவே பல எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பள்ளியின் கட்டிடம்  78 ஆண்டுகள் பழமையானது.

முன்னதாக கூரையிலிருந்து கூழாங்கற்கள் விழத் தொடங்கியதாக மாணவி வர்ஷா ஆசிரியர்களிடம் கூறியுள்ளார். ஆனால் ஆசிரியர் அவர்களை திட்டி உட்கார சொல்லி இருக்கிறார். அதன் பிறகு கட்டிடம் இடிந்து விழுந்து குழந்தைகள் அதில் புதைந்துள்ளார்கள் .விபத்து நடந்த நேரத்தில் ஆசிரியர்கள் அருகில் காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். பள்ளி நிலைமை குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த விசாரணையும் நடக்கவில்லை என்று குழந்தைகளின்  குடும்பத்தினரும் கிராம மக்களும் தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்து  இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு ஒப்பந்த வேலை வழங்கப்படும் என்றும் அரசாங்கம்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

7 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

7 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

8 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

8 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

8 மணத்தியாலங்கள் ago