“நான் அவளை கொன்னுட்டேன்”…. நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்.. வாடகை வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளம்பெண்…காவல் நிலையம் தேடி வந்த காதலன் சொன்ன பகீர் வாக்குமூலம்…!

Spread the love

பெரம்பலூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் பாரதிதாசன் 4-வது குறுக்குத் தெருவில் வசித்து வரும் புவனேந்திரன் என்பவரது வீட்டில், அரியலூர் மாவட்டம் புது வேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த நந்தினி (39) என்ற பெண் கடந்த 40 நாட்களுக்கு முன்பு வாடகைக்கு குடிவந்துள்ளார். கணவரை இழந்த நந்தினி, பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

நந்தினிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பச்சமுத்து என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு இவர்களுக்குள் திடீரென கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பச்சமுத்து, மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் நந்தினியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற பச்சமுத்து, இன்று காலை பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் தானாக முன்வந்து சரணடைந்தார்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த நந்தினியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் முக்கிய ஆதாரங்களைச் சேகரித்தனர். முதற்கட்ட விசாரணையில், நந்தினியின் கணவர் பெரியசாமி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததும், அவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருப்பதும் தெரியவந்தது.

காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறுக்கான பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நீண்ட காலமாக நீடித்து வந்த இவர்களது தவறான உறவு, இறுதியில் கொலையில் முடிந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான பச்சமுத்துவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் நகரின் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நடந்த இந்த கோரக் கொலைச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

9 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

9 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

10 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

10 மணத்தியாலங்கள் ago