அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை என்பது பொதுவாகவே எல்லா துறைகளிலும் பெண்களுக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போதைய சூழலில் பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் இது போன்ற தொந்தரவுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது சினிமா துறையில் இது அளவுக்கு அதிகமாகவே உள்ளது. ஆரம்பத்தில் இது பற்றி பேசுவதற்கு பல நடிகைகள் தயங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது தங்களுக்கு நடக்கும் பிரச்சனைகள் தொடர்பாக வெளிப்படையாக பேச தொடங்கி விட்டனர். அதுபோலத்தான் சீரியல் நடிகை ரிஹானா பல பேட்டிகளில் சினிமா சின்னத்திரையில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் தொடர்பாக வெளிப்படையாக பேசி வருகின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை எப்போதுமே நடிகைகளுக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு நடிகைகள் அவர்களுடைய உறவினர்கள் அல்லது கணவர், மாமியார் யாரையாவது ஒருவரை ஷூட்டிங் வரும்போது கூட்டிட்டு வர வேண்டும். தயாரிப்பாளரோ, நடிகரோ அல்லது இயக்குனரோ ஒருவர் நம்மிடம் நேரடியாக நெருங்க முடியாத வகையில் நாம் இருந்து கொள்ள வேண்டும். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ராஜி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் ஷாலினி இந்த விஷயத்தில் பக்காவாக செயல்படுவார்.
நானும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்த போது அந்த பொண்ணு நடிக்க வந்த புதிதில் எப்படி மேக்கப் போடணும் என்று கூட தெரியாது. அவங்க விஜய் டிவியில் கதாநாயகி என்ற நிகழ்ச்சி மூலம் தான் வெற்றி பெற்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வந்தாங்க. நான் தான் அவங்களுக்கு எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தேன். சூட்டிங் ஸ்பாட்டுக்கு எப்போதும் அவருடைய மாமியாருடன் தான் வருவார். மாமியாரை அம்மா என்று தான் கூப்பிடுவாங்க. அவங்க மாமியாரும் ஷாலினியை என்னுடைய பொண்ணு தான் என்று சொல்லுவாங்க.
அவங்களும் ஒரு நிமிடம் கூட ஷாலினியை விட்டு தள்ளி போக மாட்டாங்க. ஷாலினிக்கு எது தேவையோ எல்லாவற்றையும் அவங்க தான் பாத்துக்குவாங்க. ஆரம்பத்தில் மேக்கப் போன்ற பொருட்களை என்னிடம் தான் வாங்கிட்டு வர சொன்னாங்க. நான் மேக்கப் பொருட்கள் வாங்கி கொடுத்ததும் அவங்க காசு தந்துட்டாங்க. இதுபோல சூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒருவரை துணையோடு கூட்டிட்டு வந்தால் அட்ஜஸ்ட்மென்ட் தொந்தரவு செய்பவர்களால் நம்மிடம் நெருங்க முடியாது. நம்ம கூட யாரும் இல்லனா அவங்க நம்ம கிட்ட தவறா தான் நடந்து கொள்ள முயற்சி செய்வார்கள் என்று ரிஹானா பேசியுள்ளார்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…