Categories: சினிமா

கோபம் வரும்போது எல்லாம் எம்ஜிஆர் கேட்கும் சிவாஜியின் பாடல்.. இன்னைக்கும் அந்த பாட்ட கேட்டா மனம் சாந்தமாகிடுமாம்..!

Spread the love

இலங்கையில் பிறந்த எம்ஜிஆர் தமிழகத்தில் குழந்தை நட்சத்திரமாக நாடகங்களில் அறிமுகமாகி 1935 ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலமாக திரையுலகில் துணை நடிகராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல படங்களில் முக்கியத்துவமான மற்றும் துணை நடிகராக நடித்திருந்த எம்ஜிஆர் ஒரு படத்தில் ஒரு சண்டைக் காட்சிக்காக மட்டுமே நடித்துள்ளார். 10 வருட இடைவேளைக்குப் பிறகு 1947 ஆம் ஆண்டு ஹீரோவாக உயர்ந்தார். ஹீரோவாக பல வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து வந்த எம்ஜிஆர் ஒரு கட்டத்தில் தோல்வியை சந்தித்ததால் தானே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக களம் இறங்கி நாடோடி மன்னன் என்ற படத்தில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் வளம் வந்த எம்ஜிஆர் அரசியலிலும் தன்னை தடம் பதித்து கொண்டார்.  இப்படியான நிலையில் எம்ஜிஆருக்கு எப்போதெல்லாம் கோபம் வருகிறதோ அப்போதெல்லாம் ஒரு சிவாஜியின் பாட்டை கேட்பாராம். அதாவது இயக்குனர் கே சங்கர் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஆண்டவன் கட்டளை. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இருவரையும் வைத்து படங்களை இயக்கியவர் இயக்குனர் கே ஷங்கர் இந்த திரைப்படத்தையும் இயக்கி இருந்தார்.

இந்த படத்தில் சிவாஜியை வைத்து முருகனின் அறுபடை வீடுகளில் வைத்து ஒரு பாடல் காட்சியை எடுக்கப் போவதாக சொல்ல, சிவாஜியோ ஒரு பாடலுக்கு இத்தனை இடங்களில் வைத்து எடுக்க வேண்டுமா என்று சலிப்புடன் கேட்டுள்ளார். இந்த பாடல் காட்சி உங்களுக்கு பெரிய அளவு பெயர் தேடித் தரும், அதனால் நீங்கள் சிரமப்பட்டு தான் ஆக வேண்டும், இது முருகனின் கட்டளை என சங்கர் கூறியுள்ளார். சிவாஜி எழுந்து நின்று கைதட்டி சித்தம் முருகா உன் சித்தம் முருகா என்று கூறியுள்ளார். நடிகர் திலகத்தின் நடிப்பில் இந்த பாடல் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது. அந்த பாடல் எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்திருந்தது.

இந்த பாடல் பற்றி சங்கரிடம் பேசிய எம் ஜி ஆர், கண்ணதாசன் எழுத்திலும் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையிலும் தம்பி சிவாஜியின் அற்புத நடிப்பிலும் அந்த பாடலில் ஒரு தெய்வ அம்சம் தெரிகின்றது. அது மட்டுமல்லாமல் எனக்கு கோபம் வரும்போது எல்லாம் இந்த பாட்டை கேட்டால் மனம் சாந்தமாகிறது என்று எம்ஜிஆர் கூறியுள்ளார். அந்த பாடல் தான் “ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு” என்ற பாடல். சிவாஜி நடித்த எத்தனையோ திரைப்படங்களைப் பற்றி எம்ஜிஆர் புகழ்ந்து பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

கடவுளே… கல்யாணமான சில வாரத்துல இப்படியா ஆகணும்?… அமெரிக்காவில் சோகமாக முடிந்த… இளைஞரின் வாழ்க்கை… நெஞ்சை பதபதக்க வைக்கும் சம்பவம்…!

அமெரிக்காவில் உயர்கல்வி முடித்து பணியாற்றி வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் முகம்மத் ஜாபர் உசேன், மசாசூசெட்ஸ் மாகாணத்திலுள்ள…

5 minutes ago

அடப்பாவிங்களா… நடுரோட்டுல என்னடா கூத்து இது?… கார் சாகசம் செய்து அலப்பறை கூட்டிய வாலிபர்கள்… ஹைதராபாத்தில் ஷாக்கிங் சம்பவம்…!

ஹைதராபாத்தின் அத்தாப்பூர் பகுதியில் உள்ள சிந்தல்மெட் டி-மார்ட் கூட்ரோடு அருகே, இளைஞர்கள் சிலர் காரில் ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபட்டு…

31 minutes ago

ஐயோ… கூரையையே தூக்குறானுங்க சார்… எஸ்டேட்டில் பகல் நேரத் துணிச்சல்… ஜெரார்ட் தகடுகளைக் கழற்றிய திருடன்… சிக்கியது எப்படி?… இணையத்தில் வைரல்…!

இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… நீ வீட்டுக்கு வா… சேர்த்து வைக்கிறோம்… நீதிமன்றத்தில் கல்யாணம் செய்துவிட்டு… புதுப்பெண்ணைச் சிறைவைத்த பெற்றோர்… மாடியிலிருந்து குதித்து விபரீத முடிவு… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!

காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…

9 மணத்தியாலங்கள் ago