Categories: சினிமா

குடும்பஸ்தன் படத்தில் மணிகண்டனுக்கு பதில் நடிக்க வேண்டியது இந்த நடிகர் தானா?.. அட இப்படி மிஸ் பண்ணிட்டாரே..!

Spread the love

காதலும் கடந்து போகும், காலா ,விக்ரம் வேதா போன்ற பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மணிகண்டன்.  அதன் பின்னர் அவர் ஜெய் பீம் படத்தில்  நடித்த ராஜாக்கண்ணு கதாபாத்திரம் அவரை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு சென்று அவரை ஒரு நடிகராக அங்கீகரிக்க வைத்தது. மணிகண்டன் நடிகராக மட்டுமில்லாமல் பல திரைப்படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ளார் . இவர் இயக்கிய “நரை எழுதும் சுய சரிதம்” என்ற திரைப்படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. அதன்பின்னர் அவர் கதாநாயகனாக நடித்த ‘குட்நைட் ’ படம் பெரிய வெற்றியைப் பெற்று அவரைக் கதாநாயகன் ஆக்கியது.

அதன் பின்னர் அவர் நடித்த லவ்வர் திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து மணிகண்டன் நடிப்பில் தரமான ஒரு கதைக்களத்துடன் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் குடும்பஸ்தன். இது திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ராஜேஸ்வரி இயக்கி இருந்த நிலையில் இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, சுந்தர்ராஜன் மற்றும் குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எதார்த்தமான கதைகளத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.

இந்தத் திரைப்படத்தின் கதையை முதலில் நடிகர் அசோக் செல்வன் கேட்ட நிலையில் அவருக்கு கால் சூட் இல்லாத காரணத்தால் இந்த படத்தில் மணிகண்டனை அடிக்க சிபாரிசு செய்தார். இப்படியான நிலையில் குடும்பஸ்தன் திரைப்படத்தை அசோக் செல்வன் மட்டுமல்ல மற்றொரு நடிகரும் மிஸ் செய்துள்ளார். அவர் வேறு யாருமில்லை நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் தான். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிவராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த தகவலை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

 

 

அதில், சமீபத்தில் குடும்பஸ்தன் திரைப்படம் பார்த்தேன். அந்த கதை எனக்கும் வந்தது. சில காரணங்களால் அந்த படம் என்னால் பண்ண முடியாமல் போய்விட்டது. ஆனால் அந்த படம் பார்க்கும்போது கோயம்புத்தூர் ஸ்லாம் என்பதை எல்லாம் தாண்டி அந்த கதாபாத்திரத்தை மணிகண்டன் பண அளவுக்கு வேற யாரும் பண்ணியிருக்க முடியாது. எனக்கு படம் பார்க்கும்போது அவங்க பேசுற ஸ்சாங் எல்லாம் எனக்கு ஊருக்கு போயிட்டு வந்த ஒரு பீல் இருந்தது என சிபிராஜ் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

“1 வாரம்தான் டைம்…. அதுக்குள்ள இத பண்ணனும் இல்லனா?”…. முதல்வர் விஜய்க்கு துரைமுருகன் விதித்த கெடு… பற்றி எரியும் தமிழக அரசியல் களம்….!

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 3 ரகசிய கோப்புகள் விவகாரம் மற்றும் தவெக உறுப்பினர்களின் பேச்சு குறித்து திமுக…

5 minutes ago

“பல ஆண்டுகளாக பிச்சை எடுத்த மூதாட்டி…” வீட்டில் சிக்கிய ரூ.1 கோடிக்கும் அதிகமாக பணம்…. மறைவுக்குப் பின் வெளிவந்த மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை…!!

கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியில், பள்ளிவாசல் அருகே பல ஆண்டுகளாக அமர்ந்து பிச்சை எடுத்து வந்த முதிய பெண்மணி ஒருவர்…

36 minutes ago

பார்த்தாலே உடம்பு நடுங்கும்..! மரமாக மாறும் மனிதர்… உலகையே மிரள வைத்த விசித்திர நோய்… வாழ்நாள் முழுவதும் தீராத வேதனை…!!

'மர மனித நோய்' என்று பரவலாக அறியப்படும் எபிடெர்மோடிஸ்பிளாசியா வெருசிஃபார்மிஸ் என்பது மனிதர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய ஒரு மிக அரிதான…

43 minutes ago

BIG BREAKING: ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்… சற்று முன் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர்…

51 minutes ago

“காதலால் சின்னாபின்னமான குடும்பம்”… 2 கொலை… ஒரே ஒரு ஊசியில் முடிந்த வாழ்க்கை”… மொத்தக் குடும்பத்தையும் அழித்த கொடூரக் காதல் கதை…!!

சங்கரெட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த சுரேகா என்ற இளம்பெண், தனது காதல் திருமணத்திற்குப் பெற்றோர் சம்மதிக்காத…

53 minutes ago

“இங்க நான் தான் பாஸ்; உன்னால முடிஞ்சத பார்த்துக்கோ…” ரயிலில் கூடுதல் கட்டணம் வசூல்… அதிகாரிகளை மதிக்காமல் பேசிய ரயில்வே ஊழியர்… கொந்தளிக்கும் பயணிகள்…!!

ரயிலில் பயணித்த நபர் ஒருவரிடம், ரயில்வே உணவக ஊழியர் அதிகக் கட்டணம் வசூலித்து அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

59 minutes ago