தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாக தயாராகி வருகிறார். கடந்த மாதம் செப்டம்பர் திருச்சியில் தன்னோட சுற்றுப்பயணத்தை தொடங்கிய அவர் நாகப்பட்டினம், திருவாரூர், கரூர் பகுதிகளில் மக்களை சந்தித்தார். கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தார்கள். இந்த சம்பவத்துக்கு பிறகு அவருடைய சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டது. இதனையடுத்து TVK சார்பாக அரங்க கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதில் மட்டுமே விஜய் பங்கேற்றார்.
காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் 2000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டதில் கலந்து கொண்டு பேசினார். இதற்கிடையில் விஜய் கட்சியில் செங்கோட்டையன், அடுத்ததாக நாஞ்சில் சம்பத் இணைந்துள்ளது TVK விற்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஈரோட்டில், தவெக தொண்டர்களிடையே, தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் டைமிங், ரைமிங்கில் பேசியுள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் பேசிய அவர், “நீங்கள் பயப்பட தேவையில்லை. யார் வேண்டுமானாலும் உங்களிடம் வாக்குகளை சேகரிக்க வருவார்கள். அவர்களுக்கு வணக்கத்தை போடுங்கள், வாக்குகளை விஜய்க்கு போடுங்கள்” என பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஐடி விங்குடன் இணைந்து காங்கிரஸ் கட்சி பணியாற்றியதாக வெளியான…
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தொங்கு சட்டசபை (Hung Assembly) ஏற்பட்டுள்ள சூழலில், அதிமுக-வின் அடுத்தகட்ட நகர்வு…
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) வேட்பாளர் வி.எஸ். பாபு, முன்னாள் முதலமைச்சர்…
தமிழ்நாடு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் (DGE) வெளியிட்டுள்ளது. தேர்வு…
தமிழக அரசியலில் கடந்த இரண்டு தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக-காங்கிரஸ் கூட்டணியில், தற்போது விஜய் தலைமையிலான தவெக-வின் வெற்றியால் பெரும்…
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) தொண்டர்களால் தான் தாக்கப்பட்டதாகக் கூறி, தலையில் பெரிய கட்டுடன் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பெண்…