“கர்ப்பிணிகள், சிறுவர்கள், முதியவர்கள் வர வேண்டாம்” – தொண்டர்களுக்கு தவெக முக்கிய அறிவுரை…!!

Spread the love

அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை  சந்திப்பதற்கு தீவிரமாக தயாராகி வருகிறார் விஜய். கடந்த மாதம் செப்டம்பர் திருச்சியில்  முதன்முதலாக சுற்றுப்பயணத்தை தொடங்கிய அவர்  நாகப்பட்டினம், திருவாரூர், கரூர் பகுதிகளில் மக்களை சந்தித்தார். கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தார்கள். இந்த சம்பவத்துக்கு பிறகு அவருடைய சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டது. இதனையடுத்து தவெக சார்பாக அரங்க கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதில் மட்டுமே விஜய் பங்கேற்றார்.

காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் 2000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டதில் கலந்து கொண்டு பேசினார். இதற்கிடையில் புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டார். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டு மக்கள் சந்திப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை  உப்பளத்தில் காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதற்காக தவெக சார்பில் சில வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், விஜய் பரப்புரையின்போது சுற்றுச்சுவர், மரம், வாகனங்களில் ஏறக் கூடாது. கட்டடங்கள் மீது எற கூடாது., மின்கம்பங்கள் அருகே செல்ல கூடாது. கர்ப்பிணிகள், சிறுவர்கள், முதியவர்கள் வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

“ஒரே நாளில் இரட்டை கொண்டாட்டம்” விஜய்யின் வெற்றியையும் த்ரிஷாவின் பிறந்தநாளையும் முடிச்சுப் போட்ட பிரபலங்கள்..!!

நடிகை த்ரிஷா தனது பிறந்தநாளை மே 4-ம் தேதி கொண்டாடினார். அதே நாளில் நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்'…

1 minute ago

இபிஎஸ்-க்கு கெடு விதிக்கும் சி.வி.சண்முகம்..? அதிமுக-வில் உச்சகட்ட பரபரப்பு.. தவெக கூட்டணியால் அதிரும் அரசியல் களம்..!!

தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய பரபரப்பான சூழலில், அதிமுக-வின் மூத்த தலைவர்களான சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர்…

3 minutes ago

தலைவர்கள் சிலைக்கு அவமதிப்பா..? பேரறிஞர் அண்ணா கையில் தவெக கொடியை திணித்த தொண்டர்கள்.. கொந்தளிக்கும் அரசியல் கட்சிகள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களின் போது, தமிழக வெற்றிக் கழகத்தினர் பேரறிஞர் அண்ணாவின் சிலையின் கையில் தங்கள் கட்சியின்…

6 minutes ago

விஜய்யின் மாஸ்டர் பிளான்..! செங்கோட்டையனுக்கு அமைச்சரவையில் முக்கிய இடம்..? அதிரும் அரசியல் களம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது அமைச்சரவையை அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.…

13 minutes ago

திமுக தோல்வியால் உஷாரான அகிலேஷ் யாதவ்!… “இனி அவங்க வேண்டாம்”… உத்தரப் பிரதேச அரசியலில் திடீர் பூகம்பம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில், பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அகிலேஷ் யாதவ்…

33 minutes ago

“ஆதரவு தரலைனா கட்சி காலி?”… விஜய்க்கு மற்ற கட்சிகள் ஓடி ஓடி ஆதரவு தருவது ஏன்?… பின்னணியில் இருக்கும் டெல்லி ஸ்கெட்ச்…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், பெரும்பான்மைக்குத் தேவையான 10 இடங்களுக்குப் பல்வேறு கட்சிகள்…

44 minutes ago