அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாக தயாராகி வருகிறார் விஜய். கடந்த மாதம் செப்டம்பர் திருச்சியில் முதன்முதலாக சுற்றுப்பயணத்தை தொடங்கிய அவர் நாகப்பட்டினம், திருவாரூர், கரூர் பகுதிகளில் மக்களை சந்தித்தார். கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தார்கள். இந்த சம்பவத்துக்கு பிறகு அவருடைய சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டது. இதனையடுத்து தவெக சார்பாக அரங்க கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதில் மட்டுமே விஜய் பங்கேற்றார்.
காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் 2000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டதில் கலந்து கொண்டு பேசினார். இதற்கிடையில் புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டார். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டு மக்கள் சந்திப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை உப்பளத்தில் காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதற்காக தவெக சார்பில் சில வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், விஜய் பரப்புரையின்போது சுற்றுச்சுவர், மரம், வாகனங்களில் ஏறக் கூடாது. கட்டடங்கள் மீது எற கூடாது., மின்கம்பங்கள் அருகே செல்ல கூடாது. கர்ப்பிணிகள், சிறுவர்கள், முதியவர்கள் வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
