தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடர், பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கும் சுவாரசியங்களுக்கும் மேடையாக மாறியுள்ளது. ஆளுநர் உரை முழுமையாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவையில் இருந்த அனைத்துக் கட்சி எம்எல்ஏ-க்களும் தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து மெதுவாகக் கலைந்து வெளியேறத் தொடங்கினர். ஆனால், மதிமுக-வைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களான கடையநல்லூர் ராஜேந்திரன் மற்றும் சீர்காழி செந்தில் செல்வன் ஆகிய இருவரும் அவசரப்படாமல் தங்களது இருக்கையிலேயே அமர்ந்து காத்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அவை ஓரளவுக்குக் காலியான வேளையில், அமைச்சர் செங்கோட்டையன் அந்த மதிமுக எம்எல்ஏ-க்களை நோக்கி புன்னகையுடன் நடந்து வந்தார். இருக்கையில் காத்திருந்த கடையநல்லூர் ராஜேந்திரனுடனும், சீர்காழி செந்தில் செல்வனுடனும் கைகுலுக்கி வாழ்த்துப் பரிமாறிக்கொண்ட செங்கோட்டையன், அதன்பின் மேலே இருக்கும் தனது மாடி அறைக்கு வருமாறு அவர்களுக்கு ஒரு ரகசிய சிக்னலை காட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். இந்த சிக்னலைத் தொடர்ந்து, மதிமுக எம்எல்ஏ-க்கள் இருவரும் அவரைச் சந்திக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அண்மையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகிய இருவருமே முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசியிருந்த சூழலில், இன்று சட்டசபையில் நடந்த இந்தச் சம்பவம் அரசியல் நோக்கர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. தவெக தலைவர் விஜய்யுடனான மதிமுக தலைவர்களின் சந்திப்பு ஏற்கனவே திமுக கூட்டணியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழலில், அமைச்சர் செங்கோட்டையன் மதிமுக எம்எல்ஏ-க்களைத் தனியாக மாடி அறைக்கு அழைத்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பலத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
வரும் ஜூன் 27ஆம் தேதி நடைபெறவுள்ள மதிமுக பொதுக்குழுவில், திமுக கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா என்ற முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்பாகவே தவெக-வுடன் வைகோ மற்றும் மதிமுகவினர் தீவிர நெருக்கம் காட்டி வருகின்றனர். அவைக்கு உள்ளேயும் வெளியேயும் அரங்கேறி வரும் இந்த முக்கிய நகர்வுகள், தமிழக அரசியலில் புதிய கூட்டணி கணக்குகளை உருவாக்குமா என்ற விவாதத்தை கிளப்பியுள்ளதோடு, இந்த இரு மதிமுக எம்எல்ஏ-க்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் பரவலான பேச்சுகள் எழுந்துள்ளன.
தூத்துக்குடி நேரு காலனி பகுதியில் தொழிலாளி ஒருவரின் வீட்டின் மீது மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலைத் தீயிட்டு வீசிவிட்டுத்…
தமிழக அரசின் சார்பில் மூத்த குடிமக்கள் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை இலவச…
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, பிறந்து 56 நாட்களே ஆன தனது குழந்தையைத் தூங்க வைப்பதற்காக மின்விசிறியைப் போட்ட தந்தை…
தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர், ஜூன் 18, 2026 அன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களின் உரையுடன்…
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் நுழைவுவாயில் கான்கிரீட் பகுதி திடீரென இடிந்து விழுந்த விபத்தில், தாய்…
தி.மு.க. ஆட்சியில் 2022-ஆம் ஆண்டு மாணவர்களின் கல்வி, திறன் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கப்பட்டது. அரசுப்…