திமுகவை வீழ்த்த இவரால் மட்டுமே முடியும்… எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில் விஜய்யை வைத்த செங்கோட்டையன்…!!!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்தும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசிய உருக்கமான கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. ஈரோட்டில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், தான் அதிமுகவில் இருந்து விலகிய பிறகு தன்னை அரவணைத்துக் கொண்டவர் விஜய் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இது குறிப்பாக, தனது சட்டையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்திருப்பதை கவனித்த விஜய், “நீங்கள் எப்போதும் ஜெயலலிதா அம்மாவின் புகைப்படத்தை வைத்துக் கொள்ளுங்கள், அதுதான் எனக்கு மகிழ்ச்சி” என்று கூறியதாக செங்கோட்டையன் தெரிவித்தார். மற்ற தலைவர்கள் தங்களது புகைப்படத்தை மட்டுமே முன்னிலைப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் காலத்தில், மாற்றுத் தலைவருக்கு மரியாதை அளிக்கும் விஜய்யின் பண்பு தன்னை வியக்க வைத்ததாக அவர் பாராட்டினார்.

மேலும் திமுகவை வீழ்த்தும் ஆற்றல் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்குப் பிறகு தற்போது தளபதி விஜய்க்கு மட்டுமே இருப்பதாக செங்கோட்டையன் தனது உரையில் ஆணித்தரமாகத் தெரிவித்தார். தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக விஜய்யை கோட்டையில் அமர வைப்பதற்கான ஆயத்தமாகவே இந்த கூட்டங்கள் நடைபெறுவதாகக் குறிப்பிட்ட அவர், ஜாதி, மத பேதமின்றி அனைவரையும் நேசிக்கும் பண்பு விஜய்யிடம் இருப்பதாகக் கூறினார்.

இந்நிலையில் 26 வயதில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய தனக்கு, தற்போது விஜய்யுடன் இணைந்து பயணிப்பது மூன்றாவது தலைமுறைத் தலைவருடனான பயணம் என்றும், ராணுவக் கட்டுப்பாட்டுடன் செயல்படும் தவெக தொண்டர்களின் அமைதியே விஜய்யின் வெற்றியை உறுதி செய்யும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Rajeshwari

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

4 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

4 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

5 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

5 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

5 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

5 மணத்தியாலங்கள் ago