கோவை புதூர் சி.பி.எம் கல்லூரிக்கு அருகே உள்ள ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதியில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின் பேரில், குனியமுத்தூர் போலீஸாரும் தடய அறிவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த பெண் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்த எந்தவொரு துப்பும் இதுவரை கிடைக்கவில்லை. மர்ம நபர்கள் யாரேனும் அந்தப் பெண்ணைக் கடத்தி வந்து, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தடையங்களை மறைப்பதற்காகக் கொலை செய்து உடலை இங்கே வீசிச் சென்றார்களா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமாக இந்த விபரீதம் நடந்ததா என்ற பல கோணங்களில் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
வழக்கிற்கு வலுசேர்க்கும் வகையில், சம்பவ இடத்தின் அருகே உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி, சந்தேகத்திற்கு இடமான நபர்களின் நடமாட்டம் குறித்து போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது அந்தப் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கை வந்த பிறகே அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது முழுமையாகத் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைக்கதை மன்னனும், பிரபல இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமான செய்தி கேட்டு ஒட்டுமொத்தத் திரை…