சென்னை புழல் அடுத்த காவாங்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், திருவள்ளூர் மாவட்டம் சிறுவாக்கம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பாலாஜி என்பவர் சூப்பர்வைசராகப் பணியாற்றி வந்தார். இவர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அங்கு பணிபுரிந்த பெண் ஊழியர்களிடம் பணியின் பெயரில் நெருக்கமாக பழக முயன்றுள்ளார். தனக்கு ஒத்துழைக்க மறுக்கும் பெண்களுக்கு அதிக வேலைப்பளுவைக் கொடுத்துக் கொடுமைப்படுத்துவதையும் அவர் வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், புழல் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஊழியர் ஒருவரிடம் பாலாஜி தொடர்ந்து தனிப்பட்ட முறையில் பேசி தொந்தரவு செய்ததோடு, ஒருகட்டத்தில் எல்லை மீறி பாலியல் ரீதியாகவும் அத்துமீறியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், தைரியமாகப் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பாலாஜியைக் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பாலாஜி அந்த நிறுவனத்தின் மேலும் பல பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி அத்துமீறி நடந்து கொண்டது வெளிச்சத்திற்கு வந்தது. வேலை இழப்பு பயம் மற்றும் சமூக காரணங்களால் மற்ற பெண்கள் புகார் அளிக்கத் தயங்கிய நிலையில், தற்போது பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபோன்று பாதிக்கப்படும் பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…