அட கொடுமையே.. மனுஷனையே மிஞ்சிடே… கையில் பீர் பாட்டிலுடன் கடற்கரையை ரசித்த குரங்குகள்… இணையத்தைக் கலக்கும் வீடியோ… நெடிசோன்கள் கொந்தளிப்பு…!!

Spread the love

இந்தோனேசியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான லோம்போக் தீவில் உள்ள குட்டா கடற்கரைக்கு அருகில், இரண்டு குரங்குகள் கையில் பீர் பாட்டில்களுடன் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கிளேர் ஹேன்சென் என்ற சுற்றுலாப் பயணி எடுத்த இந்த சில நொடிகள் ஓடும் வீடியோவில், கடற்கரையோரம் உள்ள ஒரு பாறையின் மீது அமர்ந்து இரண்டு குரங்குகள் பீர் பாட்டில்களை கையில் பிடித்துக் கொண்டு, கடலின் அழகை ரசிப்பது போல காட்சியளிக்கின்றன.

இந்த வீடியோவில் ஒரு குரங்கு பச்சை நிற பாட்டிலையும், மற்றொரு குரங்கு பழுப்பு நிற பாட்டிலையும் வைத்துள்ளன. வீடியோவின் ஒரு பகுதியில், ஒரு குரங்கு அந்த பாட்டிலை மனிதர்களைப் போல வாயில் வைத்து எதையோ குடிக்க முயற்சிப்பதும் பதிவாகியுள்ளது. அந்த பாட்டில்களில் உண்மையிலேயே மது இருந்ததா அல்லது சுற்றுலாப் பயணிகள் குடித்துவிட்டுப் போட்ட பாட்டில்களில் மீதமிருந்த சில துளிகள் இருந்ததா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், அங்கு நின்றிருந்த மற்ற சுற்றுலாப் பயணிகள் இதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் பொறுப்பற்ற முறையில் கடற்கரைகளில் போடும் குப்பைகளால் வாயில்லா ஜீவன்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், விலங்குகளின் பாதுகாப்பு குறித்தும் இணையத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன. “இது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், விலங்குகளுக்கு மது கொடுப்பதோ அல்லது அவை குடிப்பதை வேடிக்கை பார்ப்பதோ முற்றிலும் தவறானது, குரங்குகளுக்கு பழங்களை கொடுங்கள், பீர் அல்ல” என்று பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

டெல்லி ஹோட்டலில் நள்ளிரவில் பயங்கரம்… இரு பெண்களை பளார் என அறைந்த சப்-இன்ஸ்பெக்டர்… சிசிடிவி-யில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ…!

தேசிய தலைநகர் டெல்லியின் வடமேற்கு மாவட்டத்திலுள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில், நள்ளிரவில் நடந்த ஒரு காவல்துறை நடவடிக்கையின் போது இரண்டு…

11 minutes ago

பரபரப்பு..! விவசாயியிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட த.வெ.க நிர்வாகி.. அடுத்த நொடியே பதவியை பறித்த கட்சி தலைமை…!!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழக வெற்றிக்…

16 minutes ago

அடக்கடவுளே பயங்கரம்..! காரில் பெண்ணை குத்திவிட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்த வாலிபர்… உடல் கருகி சாம்பலான கொடூரம்..!!

பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…

26 minutes ago

“அவருக்கு பதவி கொடுத்தது ஏன்…?” எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்த அமைச்சர் நிர்மல் குமாரின் அதிரடி பதில்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆட்சி…

33 minutes ago

பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது… அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக…

47 minutes ago

“சினிமாவே வேண்டாம்…!” மக்கள் என்னை நிராகரிச்சிட்டாங்க…கண்ணீருடன் முடிவெடுத்த சமந்தா… தடுத்து நிறுத்திய அந்த ஒரு நபர்…!

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் 'மா இன்டி பங்காரம்'. சமந்தாவின்…

49 minutes ago