மணிரத்தினம் இயக்கத்தில் கமல் மற்றும் சிம்பு நடித்திருக்கும் படம் தக் லைப். படத்தில் திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், அபிராமி, நாசர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும்ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கடந்த ஆறாம் தேதி இந்த படம் வெளியானது. படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்தமழை பாடல் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.
படத்தில் அந்த பாடலை தீ பாடிய நிலையில் அவர் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வர இயலாததால் அந்த பாடலை மேடையில் சின்மயி பாடினார். இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பையடுத்து தக் லைப் ஆல்பத்தில் பத்தாவது பாடலாக சின்மயி வெர்ஷன் முத்தமழை பாடல் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த பாடல் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன் இந்த பாடலை கேட்டு தன்னுடைய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதாவது ஒரு பாடல் கேட்டு நாடு நரம்பெல்லாம் சிலிர்த்து போய் உயிரில் மின்சாரம் பாய்ந்து கேட்டது போல் முதல் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இதெல்லாம் உலகில் ஒரே மனிதரால் நம் ஏ ஆர் ரகுமான் அவர்களால் மட்டுமே முடியும்” என்று கூறியுள்ளார்.
மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி ஆதாரங்களைப் பெற்று, மகளிருக்கான உரிமைத் தொகையை முதல்வர் விஜய் உயர்த்தி வழங்குவார் என…
"அதிமுக, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து மூன்று வாரங்களுக்கு மேலாகிவிட்டது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச்…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…
மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்சரண் - ரீட்டா தம்பதிக்கு லவ்குஷ் நகர் அரசு சுகாதார மையத்தில்…
வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஓய்வுபெற்ற இந்துப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை…
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கவின் ஜெனில், தனது வீட்டில் தூக்கிட்டுத்…