மு க முத்து மறைவை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலினை சீமான் நேற்று அவரது இல்லத்தில் சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நான் பசியால் மயக்கமடைந்த போது எனது உடல் நலம் குறித்து விசாரித்தவர் முதல்வர் ஸ்டாலின். எப்படி இருந்தாலும் ஒரு இழப்பு என்பது பெரும் துயரம். கொள்கை என்பது வேறு பாசம் என்பது வேறு. பெருந்தலைவர் காமராஜர் இறந்தபோது அதிகமாக அழுதவர் அறிஞர் அண்ணா என்று சொல்வார்கள். அமெரிக்காவுக்கு அண்ணா செல்லும்போது நிக்சனை சந்திக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர் சந்திக்கவில்லை.
பிறகு nikson இந்தியா வரும்போது காமராஜரை சந்திக்க விரும்புகிறார். அப்போது அண்ணாதுரையை சந்திக்க விரும்பாத நிக்சனை நான் ஏன் சந்திக்க வேண்டும் என்று காமராஜர் தெரிவித்ததாக சீமான் அந்த பேட்டியில் தெரிவித்தார். இந்நிலையில் சீமான் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது காமராசர் 1975 ஆம் ஆண்டில் தான் உயிரிழந்தார். ஆனால் அண்ணா 1969 ஆம் ஆண்டிலேயே உயிரிழந்து விட்டார். 1969 ஆம் ஆண்டில் உயிரிழந்த அண்ணா 1975 ஆம் ஆண்டில் மறைந்த காமராசருக்காக எப்படி அழுது இருக்க முடியும் என நெட்டிசன்கள் தற்போது கலாய்த்து வருகிறார்கள்.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…