தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 74 வயதானாலும் பிற நடிகர்களுக்கு மிகவும் சவால் கொடுக்கும் விதமாக இன்றும் நடித்துக் கொண்டிருக்கின்றார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ரஜினி ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வருவேன் என கூறுகின்றார்.
ரசிகர்கள் மத்தியிலும் நீண்ட எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் இறுதியாக தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார். இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் அளித்தது. மறுபக்கம் இவருடைய நண்பரும் நடிகருமான கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கி திமுகவின் உதவியுடன் எம்பி ஆகிவிட்டார். சமீபத்தில் கூட ரஜினியை சந்தித்து அவர் வாழ்த்து பெற்றிருந்தார். இப்படியான நிலையில் ரஜினியின் சகோதரர் சத்ய நாராயணராவ் அளித்த பேட்டி தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதில் ரஜினிக்கு அரசியலுக்கு வர விருப்பமில்லை, தேடி வந்த கவர்னர் பதவியை வேண்டாம் என மறுத்துவிட்டார் என புதிய தகவலை அவர் கூறியுள்ளார். அதே நேரம் அண்ணாமலை அரசியலில் ஜொலிப்பார் எனவும் நடிகர் விஜய் அரசியலில் ஜொலிப்பது கடினம் எனவும் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் பல்வால் பகுதியில், கதூ ஷியாம் கோவிலுக்குச் சென்று விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் பயணித்த வாகனம் பயங்கர…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கணவன்-மனைவி அல்லது காதலர்களுக்கிடையே ஏற்படும் தகராறுகள் கொடூர சம்பவமாக மாறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த…
சீனாவின் ஒரு முக்கிய நகரத்தின் வீதியில், கண்மூடித்தனமான குடிபோதையில் வந்த நபர் ஒருவன், வீதியில் தங்கியிருந்த ஏழைப் பிச்சைக்காரர்களை மிருகத்தனமாகத்…
தெலங்கானா உணவுப் பாதுகாப்பு அமைப்பின் அதிகாரிகள் புதன்கிழமை ஹைதராபாத்தில் உள்ள தில்சுக்நகர் பஹார் பிரியாணி கஃபே உணவகத்தில் திடீர் சோதனை…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், போதை மயக்கத்தில் மயங்கிக் கிடந்த இளைஞரின் தலையில் மற்றொரு நபர் சிறுநீர் கழித்து சிரிக்கும்…
பீகார் மாநிலத்தில் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கிப் பெரும் சேதத்தைச் சந்தித்து வருகின்றன.…