பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் விஜய் சேதுபதி பேசிய சில கருத்துகள், தமிழக அரசியல் மற்றும் இணையதள தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற ஒரு டாஸ்க்கில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரு அணிகளாகப் பிரிந்து போட்டியாளர்கள் செயல்பட்டனர். அந்தத் டாஸ்க் குறித்து விமர்சித்த விஜய் சேதுபதி, “வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு, பொறுப்பும் பிரச்சனையும் வரும்போது எதிர் அணியின் மீது பழிபோட்டுவிட்டு ஓடுவது தலைமைப் பண்பு அல்ல; அது மக்களை ஏமாற்றும் வேலை” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பேச்சு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை மறைமுகமாகத் தாக்குவது போல் இருப்பதாகக் கூறி, அவரது ரசிகர்களும் தவெக தொண்டர்களும் சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதிக்கு எதிராகக் கடுமையாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, விஜய் டிவி நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. விஜய் சேதுபதியின் பேச்சு முழுக்க முழுக்க பிக்பாஸ் வீட்டின் உள்ளே நடந்த டாஸ்க் மற்றும் போட்டியாளர்களின் செயல்பாடுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்றும், இதில் எந்தவொரு வெளி நபரையோ அல்லது அரசியல் தலைவரையோ குறிப்பிடும் எண்ணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இணையத்தில் விஜய் சேதுபதி மீதான விமர்சனங்களும் தாக்குதல்களும் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அரசியல் களத்திலும் இதன் தாக்கம் எதிரொலிக்கத் தொடங்கியது.
இந்நிலைக் குறித்துப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய் சேதுபதிக்கு ஆதரவாகத் தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். “தம்பி விஜய் சேதுபதி தனது பேச்சில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை, எந்தவொரு அரசியல் கட்சியையும் சுட்டிக்காட்டவில்லை. அப்படி இருக்கும்போது, அவரது பொதுவான கருத்துகளை முதலமைச்சர் விஜய்க்கு எதிரானதாகத் தாங்களாகவே கற்பனை செய்து கொண்டு, அவரைத் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துவது கண்டனத்திற்குரியது” என்று சீமான் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தற்போது திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகேயுள்ள சின்னமாயாகுளம் காட்டுப் பகுதியில், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கோபி மற்றும் கணேசன் (எ) ரியாசுதீன்…
கர்நாடக மாநிலம் யாட்கிர் மாவட்டம் வாட்கேரா காவல் எல்லைக்குட்பட்ட குருசானகி மலையில் உள்ள ஸ்ரீ சித்தலிங்கேஸ்வரா கோயில் திருவிழாவின் போது…
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவிலைச் சேர்ந்த வீரா (எ) வீர முத்துகிருஷ்ணன் (26) என்பவர் பாஸ்ட் புட் கடை நடத்தி…
மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா கிழக்கு கேர்வாடி குடியிருப்புப் பகுதிக்குள் சுமார் 9 அடி நீளமுள்ள பிரம்மாண்ட மலைப்பாம்பு ஒன்று…
பழைய மும்பை-புனே நெடுஞ்சாலையில் காலாபூர் அருகே உள்ள அப்துல் லத்தீஃப் ஷா பாபா தர்கா பகுதி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை…
குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அகமதாபாத் நகரத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு…