மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா கிழக்கு கேர்வாடி குடியிருப்புப் பகுதிக்குள் சுமார் 9 அடி நீளமுள்ள பிரம்மாண்ட மலைப்பாம்பு ஒன்று திடீரெனப் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் அலறியடித்து ஓடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பிரபல பாம்பு பிடி வீரர் விக்கி துபே, மும்பை போலிஸாரின் பாதுகாப்புடன் அந்த 9 அடி நீள மலைப்பாம்பைச் சாமர்த்தியமாகப் பிடித்துக் கட்டுப்படுத்தினார். பின்னர் அது பாதுகாப்பாக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு அடர்ந்த காட்டுப் பகுதியில் விடுவிக்கப்பட்டது. இந்த மீட்பு நடவடிக்கையின் பரபரப்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதேபோல, சிந்துதுர்க் அம்போலி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தபோது மேலிருந்து திடீரெனப் பாம்பு ஒன்று பயணிகள் மீது விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மழைக்காலம் என்பதால் குடியிருப்பு மற்றும் சுற்றுலாப் பகுதிகளில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், பொதுமக்கள் பாம்புகளைப் பார்த்தால் தானாகப் பிடிக்க முயலாமல் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷாகர் பகுதியைச் சேர்ந்தவர் 75 வயதான ஓம்குமார். இவரது மனைவி 70 வயதான சத்யவதி. இந்த…
கர்நாடக மாநிலம் பெங்களூரு அக்ரஹார தாசரஹள்ளி பகுதியில் வசித்து வந்த பூஜா மற்றும் ஓம்பிரகாஷ் ஜோடி, கடந்த 8 மாதங்களுக்கு…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விஜய் நகர் பகுதியில், பள்ளிச் சிறுவர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த பள்ளி வேன்…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜாஜ்மவ் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் காம்பவுண்ட் சாலையில், உணவுகளை டெலிவரி செய்வதற்காக வாலிபர்…
திமுக முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்டச் செயலாளருமான அன்பில் மகேஸ் வீட்டில் இன்று காலை முதல் சுமார் 8 மணி…
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆட்ரி ஹெகன் என்ற பெண்மணி, கடந்த 2013-ஆம் ஆண்டு ஆன்லைன் டேட்டிங் தளம் வழியாக 60 வயதான…