கர்நாடக மாநிலம் பெங்களூரு அக்ரஹார தாசரஹள்ளி பகுதியில் வசித்து வந்த பூஜா மற்றும் ஓம்பிரகாஷ் ஜோடி, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பையும் மீறிக் காதல் திருமணம் செய்து கொண்டது. இந்நிலையில், பூஜாவின் குடும்பத்தினர் அனுப்பிய 4 பேர் கொண்ட கடத்தல் கும்பல், பூஜாவை திடீரென காரில் கடத்திக்கொண்டு தப்ப முயன்றது. ஹூண்டாய் வென்யூ காரில் அதிவேகமாகத் தப்பியோடிய அந்தக் கடத்தல் கும்பல், சாலையில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் மீது சராமரியாக மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியது.
இந்த கொடூர சம்பவத்தில் சாலையில் சென்ற 6 பேர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். படுகாயமடைந்தவர்களில் ஒரு பெண் தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடி வருகிறார். விபத்தை ஏற்படுத்திய கடத்தல் காரையும், கடத்தலில் ஈடுபட்ட 3 பேரையும் பெங்களூரு போலிஸார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தப்பியோடிய கார் டிரைவரை போலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் 57 வயதான சுனில். கட்டிடத் தொழிலாளியான இவர், தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகிலுள்ள சோட்டையன்தோப்பு…
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்துள்ள கவசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் 34 வயதான சரத்குமார். இவர் ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள ஒரு…
விழுப்புரம் மாவட்டம் பம்பாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான பச்சைமுத்து. இவர் பிரபல டேட்டிங் செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில்,…
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை ஊராட்சி கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் 51 வயதான சண்முகநாதன். இவரது மனைவி…
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷாகர் பகுதியைச் சேர்ந்தவர் 75 வயதான ஓம்குமார். இவரது மனைவி 70 வயதான சத்யவதி. இந்த…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விஜய் நகர் பகுதியில், பள்ளிச் சிறுவர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த பள்ளி வேன்…