பழைய மும்பை-புனே நெடுஞ்சாலையில் காலாபூர் அருகே உள்ள அப்துல் லத்தீஃப் ஷா பாபா தர்கா பகுதி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை 7 மணி அளவில் பயங்கரச் சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. கோபோலியைச் சேர்ந்த உசேன் ரஹ்மான் ஷேக் (25) என்ற இளைஞர், தனது நண்பர்கள் இருவருடன் மும்பையிலிருந்து கோபோலி நோக்கி ஆல்டோ காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகக் கடுமையான தூக்கக் கலக்கம் ஏற்பட்டதால், காரின் கட்டுப்பாடு இழந்து பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு கார் சாலையில் இருந்து கீழே பாய்ந்து கவிழ்ந்தது.
இந்தக் கோர விபத்தில் காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. காரை ஓட்டி வந்த உசேன் ரஹ்மான் ஷேக் மற்றும் அருகில் அமர்ந்திருந்த உசேன் சலீம் பதான் (23) ஆகிய இருவருக்கும் தலை மற்றும் கைகளில் காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக மீட்ட பொதுமக்கள், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அவர்களைக் கோபோலியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். காரில் பயணித்த மூன்றாவது நபர் காயமின்றித் தப்பினார். இச்சம்பவம் குறித்து காலாபூர் மற்றும் நெடுஞ்சாலை பாதுகாப்பு போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.30 கோடி பேரம் பேசியதாக எழுந்த குதிரை பேர குற்றச்சாட்டில், அதிமுக நிர்வாகி…
காந்திவிலி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பட்டப்பகலில் துணிகரத் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. உணவு அல்லது பார்சல் டெலிவரி…
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வி.எஸ்.பாபு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களுக்கு தமிழக சுகாதாரத்துறை…
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில், மனைவியின் மீது கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்ட கணவன் , அவரை நாற்காலியில் கட்டிவைத்து…
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…